Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவ ஆசிரியர்கள்!

காலையில் அரக்கப்பரக்க கல்லூரிக்குச் சென்று, மாலை வரை தனக்கான கல்வியை கற்றுக்கொண்டுவிட்டு, மாலை ஐந்து மணிக்கு மேல் பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சேவையை தொடர்கின்றனர் ,கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவ, மாணவியர்கள்.

கல்லூரி இளங்கலை முதலாமாண்டில் இருந்து, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெறப் பயிலும் மாணவர்கள் வரை இந்த சேவையில் பங்கேற்றுள்ளனர்.


 
 அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவையாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் தானே என்ற மகாகவி பாரதி பாடியதற்கு ஏற்ப இந்த இளைஞர்களின் சமுதாய நற்பணி மன்றம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த மன்றம், முதன் முதலில் வேளாண் கல்லூரியில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களும்  எழுத, படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, இன்று சமுதாயத்தில் பெருமளவு வளர்ந்து போற்றத்தக்க அளவில் பொன்விழா காணுகின்றது.

1954 ஆம் ஆண்டு பல்கலைக்கழக  ஊழியர்கள் கல்விக்குத் தொடங்கி, ஊழியர்களுடன் சேர்த்து அவர்கள் குழந்தைக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது. நாளடைவில் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை நேர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியைச் சுற்றியுள்ள பூசாரிபாளையம்,புதூர், சீரநாயக்கன்பாளையம்,லாலிரோடு,பால்கம்பெனி,பனைமாத்தூர் ஆகிய இடங்களை சேர்ந்த மாணவச் செல்வங்களும் கல்வியின் பயனை உணர்ந்து, இந்த  அமைப்பை நோக்கி வரத்தொடங்கினர்.

கல்லூரி மாணவ, மாணவிகள் இம்மன்றத்தில் சேர்ந்து பாடம் கற்பிப்பதற்கு சில நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. நேரம் தவறாமை,முறையான உடை அணிதல், சீரான சிகை அலங்காரம் என பல உள்ளது. மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரை இம்மன்றத்தில் பாடம் கற்பிக்கப்படும். தெலுங்குபாளையம் கல்லூரி வாளகத்திற்கு வெளியில் இருப்பதால் கல்லூரி மாணவர்கள் அங்கேயே சென்று பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பர். கல்லூரி வளாகத்தினுள் இருக்கும் கிளைக்கு கல்லூரி மாணவிகள் சென்று பாடம் கற்பிப்பர்.

இங்கு பயின்ற பல மாணவர்கள்,  அரசுப் பொதுத் தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள். வருடம் தோறும் மாவட்ட அளவில் வினாடி - வினா போட்டி, அறிவியல் கண்காட்சி போன்ற பல போட்டிகள் பள்ளி மாணவர்களுக்காக இம்மன்றத்தில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.மேலும் வருடம் ஒரு  முறை கல்விச் சுற்றுலாவும்  இம்மன்றம் சார்பாக இலவசமாக மாணவர்களை அழைத்துச் செல்வது என இதன் சிறப்பு இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

இன்றைய ஆசிரியர்  தினத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த மாணவ ஆசிரியர்களை நாமும் பாராட்டுவோம்.
 
- சா.கவியரசன்
படங்கள்: கோ.க.தினேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ