Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிரியர் மட்டுமல்ல அன்னையும் கூட!

து நாம் அனைவருமே சிறு வயது முதல் கேட்டு வளர்ந்த ஒன்று. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு தாயுமே ஆசிரியர்தான். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் அன்னையுமாக இருக்கும் ஆசிரியரை காண்பது அரிது என்றாலும், ஒன்றிரண்டு மாணிக்கம் போன்ற ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களுள் ஒருவரே எலிசபெத் அம்மா. ராஜாஸ்தானில் பிறந்த இவர்,  தற்போது திருநெல்வேலி மாவட்டம், ஆய்க்குடி அருகே மைனாப்பேரியில், எழில் கொஞ்சும் தோட்டம் சூழ்ந்துள்ள இல்லத்தில் தனது 30 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

தென்காசி மேலகரத்திலுள்ள தனது செயின்ட்.இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் இவர், வெறும் ஆசிரியர் மட்டும் அல்ல; 30க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தாயும்கூட. ஆம்.. பெற்றோர், உறவினர் ஆகியோரால் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகளை தன் குழந்தைகளாகவே வளர்க்கிறார் இவர்.


அவரிடம் பேசியபோது, ” நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ராஜஸ்தானில்தான். என் தந்தை 400 குழந்தைகளை தன் சொந்த செலவில் வளர்த்து வந்தார். எனக்குத் திருமணம் ஆனதும் தென்காசி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் அங்கிருந்து 1 வயதிற்குட்பட்ட 4 குழந்தைகளுடன் இங்கு வந்தேன். இப்போது எனக்கு 30 குழந்தைகள்!” என்றார்.

இவர் வளர்க்கும் குழந்தைகளுள் மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளும் உள்ளனர். அவர்களுள் ஒரு 6 மாத தீக்காயமுடைய குழந்தையை மரத்தடியில் கண்டுபிடித்து, கிஃப்டி எனப் பெயர் சூட்டி வளர்க்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அக்குழந்தையை இவர்கள் பார்க்கும் முன் வரை குரங்குகள் உணவு கொடுத்தனவாம். ஒரு 5 அறிவு  பிராணிக்கு இருக்கும் இரக்கம்கூட அக்கிரமத்து மக்களுக்கு இல்லை. இப்போது கிஃப்டிக்கு 18 வயதாகிறது.

அந்த 30 குழந்தைகளுக்குமே எந்த ஒரு குறையுமில்லாமல் தன் சொந்த செலவில் வளர்த்து வருகிறார் எலிசபெத் அம்மா. வீட்டில் ஒரு நல்ல தாயாகவும் பள்ளியில் ஒரு நல்ல ஆசிரியராகவுமிருந்து எதிர்கால இந்தியாவின் தூண்களை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

அனைத்துக் குழந்தைகளுக்குமே கற்பிக்கப்படும் ஒரு தாரக மந்திரம் “மாதா பிதா குரு தெய்வம்”. ஆனால், இவர்களுக்கு  “குரு குரு குரு தெய்வம்" என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

ந. ஆசிபா பாத்திமா
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ