Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெட்டிங் எக்ஸ்போ: கல்யாண ஷாப்பிங் இங்கே ஈஸி...!

'வீட்ட கட்டிப்பாரு; கல்யாணத்த பண்ணிப்பாரு!' என்ற பழமொழியின்  வீரியத்தை உணராதவர்கள்  இருக்க முடியாது.

ஒரு கல்யாணம் பண்றதுனா சும்மாவா...? சடங்கு, சம்பிரதாயம், ஷாப்பிங் என எத்தனையோ வேலைகள். தனக்கு ஏற்ற துணையை தேர்தெடுத்ததும் பூவைத்தல், நிச்சயம், சங்கீத், மெகந்தி, முகூர்த்தம், ரிசெப்ஷன், மறுவீடு என இன்னும் பற்பல நிகழ்வுகள் அணிவகுக்கும். இவை வாழ்வில் ஒரு முறையே நிகழப்போகும் ரீவைண்ட் செய்ய முடியாத தருணங்கள். 

எனவே இதை மிகச்சிறப்பாக அமைத்திட நாம் பிரயத்தனப்படுவதில் தவறில்லை. காஞ்சிபுரத்தில் பட்டு வாங்கி, காரைக்குடியில் சமைக்க ஆள் சொல்லி, மேடை அலங்காரத்திற்கு தனி ஆள் பிடித்து, மண்டபம் புக்செய்து என அலைச்சலுக்கும் பஞ்சமில்லை. ஆனால் மேற்சொன்ன அனைத்தும் ஒரே இடத்தில் அமையப்பெற்றால்? 'ஒரே இடத்திலா... சூப்பர்!' என நீங்கள் ஆனந்த அதிர்ச்சி அடைவது புரிகிறது.

ஆம்!  அனைத்தும் ஒரே இடத்தில்தான்.. கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது மூன்று நாள் வெட்டிங் எக்ஸ்போ(wedding expo).

தங்கம் மற்றும் வைர நகைகளின் அணிவகுப்புடன் தொடங்கியது கண்காட்சி. மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் நம் கண்களை பறிக்கும் பிரைடல் கலெக்‌ஷன் நகைகள். புதிய தொழில்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரோ போமிங் நகைகள், எனாமல் பெயின்ட் நகைகள் மற்றும் முழுக்கவே வெள்ளியால் செய்யப்பட்ட மாலைகள் போன்ற புது வரவுகளும் கண்காட்சியில் இடம்பிடித்தன.

திருமண சடங்குகளுக்கான பட்டுப்புடவைகள், பற்பல வண்ணங்களில் படபடத்தன. 3000 முதல் 1.5 லட்சம் வரையிலான சர்வலட்சணங்கள் கொண்ட இந்த  பட்டுப்புடவைகளுக்கான டிசைனர் ப்ளவுஸ்,  அழகிய வேலைப்பாட்டுடன் மின்னிக்கொண்டிருந்தன.  இவை 2,500 முதல் 18,000 வரை விலையிடப்பட்டிருந்தன. இத்துடன் ரிசப்ஷன் மற்றும் சங்கீத்திற்கான அனார்க்கலி மற்றும் லெஹங்கா போன்ற டிசைனர் ஆடைகளும் அணிவகுத்து நின்றன.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

'என்னது.. இத்தனை வெரைட்டியா?!' என நம்மை திகைக்க வைத்தன நூற்றுக்கணக்கில் அடுக்கப்பட்டிருந்த திருமண அழைப்பிதழ்கள். 30லிருந்து ஆரம்பிக்கும் இவற்றின் விலை 7,000 வரை செல்கிறது.

திருமணத்தில் அடுத்த முக்கிய பங்குவகிப்பது புகைப்படங்கள். அன்று நடந்த கொண்டாட்டத்தை வாழ்நாள் முழுவதும் எண்ணிப்பார்த்து, பார்த்து மகிழ்ச்சி அடைந்திட,  வித்தியாசமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்படும் இவற்றிற்கு 90,000 முதல் ஆரம்பமாகும் விலை, அவரவர் தேவைகளுக்கேற்ப மாறுகிறது.

தங்கள் திருமணத்தை பற்றிய கற்பனைகள் அனைவருக்குமே உண்டு. அதிலும் தங்கள் புதிய உறவின் தொடக்கமான திருமண மேடை அலங்கரிப்பில், அவர்கள் அதீத அக்கறையுடனே செயல்படுகின்றனர். இப்போது புதிய டிரெண்ட் எகோ ஃபிரெண்ட்லி(eco-friendly) மற்றும் கோ கிரீன்(go green) அலங்காரங்கள்தான்.

சீர் கொடுக்கப்படும் வெள்ளிப் பொருட்கள், சீர் தட்டு அலங்கரிப்பு, ஆண்களுக்கான ஆடைகள், பெண்களுக்கான சிகை அலங்காரம் மற்றும் திருமணத்திற்கு வரும் விருந்தினருக்கு கொடுக்கப்படும் அன்பளிப்புகள் போன்றவைகளுக்கான ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன.

மணமக்கள்,  தங்களுக்கு மட்டுமின்றி தம் அடுத்த தலைமுறையை வரவேற்று அன்பளிப்பளிக்கும் விதமாக, மூன்றே கிராம் எடை கொண்ட குட்டி தங்க சைக்கிள் ஒன்றும் கண்காட்சியில் இடம் பெற்றது.

கு.அனுஷ்யா
படம்:சு.ரகுராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close