Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

60 வயது 'மிஸ்டர் பீன்' கொண்டாடிய 25வது பிறந்தநாள்!

கலகலப்பான தோற்றம், பார்த்தாலே சிரிப்பு வரும் சைகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவரும் கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கடந்த வெள்ளிக்கிழமையோடு மிஸ்டர் பீன் கதாப்பாத்திரம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை வித்தியாசமான முறையில் கொண்டாடினார் 60வது வயதான ரோவன் அட்கின்சன்.

1994ம் ஆண்டில் ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson) நடித்த மிஸ்டர் பீனின் பகுதியில் இருந்து வரும் ஒரு காட்சியை நேரடியாக செய்து காட்டி அசத்தினார்.அதில் தனது கார் முழுவதும் பரிசு பொருட்களால் நிறைந்து விட அதனை சமாளிக்க காரின் மீது ஒரு நாற்காலியை வைத்து அதில் அமர்ந்து காரை இயக்குவார் பீன்.அதேபோல் 25வது வருடத்தை லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை பிரிட்டிஷ் லைலேண்ட் 1000 மூலம் சுற்றி வந்து. இறுதியில் கேக் வெட்டி, பரிசு பொருட்களோடு கொண்டாடினார் பீன்.

ரோவன் அட்கின்சனுக்கு வயது 60 என்றாலும் 6 வயது குழந்தையாக தான் பலரும் அட்கின்சனை பார்க்கிறார்கள். அட்கின்சன் என்பதைவிட அவரை மிஸ்டர் பீனாக தான் அனைவருக்கும் தெரியும். 25 வருடங்களாக நாம் தேடி தேடி பார்த்த இந்த கதாபாத்திரத்துக்கு 25வது பிறந்த நாள் வாழ்த்தை பகிர்வோம்.

1994ம் ஆண்டு வெளியான மிஸ்டர் பீனின் வீடியோ இங்கே...

 

-ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ