Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக கல்வியறிவு தினம்: குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் மாத்தியோசி திட்டம்!

ந்தியா இன்று கல்வி என்ற தராசில் எப்படி நிற்கிறது என  தெரிந்து கொள்ள வேண்டாமா?

இந்தியாவில் ஆரம்பக் கல்வி சேர்க்கை சகிவிகிதம் அதிகமாகதான் உள்ளது. ஆண்களில் 98.8 % , பெண்களில் 98.5 % என்கிறது யூனிசெஃப் அறிக்கை.  ஆனால், இவர்களே உயர்கல்விக்கு வரும் போது 50 %க்கும் மேலானோர் பள்ளியை விட்டு நின்றுவிடுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? 


எப்படி பார்த்தாலும் இந்தியா முன்னேறி வருகிறது. ஆனால், கல்வித்துறையில் மட்டும் இந்தியா செல்ல வேண்டிய தூரம் அதிகம் என குறை கூறப்படும் நிலையில், ஒரு மாற்றத்திற்கு நமது சாதனைகளின் புகழ் பாடலாமே...

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களின் அச்சுறுத்தல் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டம், இன்று கல்வித்துறையில் செய்த சாதனைக்காக ஜனாதிபதியிடம் விருது வாங்க உள்ளது.

இதேபோல், தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் பல விஷயங்களுக்காக செய்திகளில் அடிக்கடி வந்திருக்கும். ஆனால், இன்று தருமபுரியும் ஜனாதிபதி விருது வாங்க உள்ளது.

ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கிரௌத் கிராம பஞ்சாயத்தும் 'லிட்ரேட் இந்தியா'  என்ற திட்டத்தில் சிறப்பாக பங்களித்ததற்காக விருது பெறுகிறது.

அரசுப் பள்ளிகள் என்றாலே அலட்சியம் உண்டு நம்மவர்களுக்கு. ஆனால் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் செய்திருக்கும் செயல்கள் கல்வித்துறையையே மாற்ற வல்லது. அந்த அரசு பள்ளி, கல்வியறிவில் முன்னோடியாக இருக்கும் கேரளா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் இல்லை.


மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள சத்தீஸ்கரின் பஸ்தார் மாநிலத்தில்தான் உள்ளது. இதற்கு காரணம், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அனுசுயாதான். சராசரி பள்ளிகள் போல இங்கே மேசைகள் நாற்காலிகள் கிடையாது. ஆசிரியர் உட்பட அனைத்து மாணவர்களும் தரையில் அமர்ந்துதான் உரையாடுகிறார்கள்.

இது எதற்கு என்று தோன்றுகிறதா?  இந்த குழந்தைகளின் வீட்டில் பெற்றோர் எப்படி தரையில் அமர்ந்து பேசுவார்களோ அது போன்ற உணர்வை ஏற்படுத்தவே. மல்டி லெவெல், மல்டி கிரேட் முறையின்படி குழந்தைகள் படிப்பதோடு  மட்டும் அல்லாமல் தங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்திலும் பள்ளி சூழல் அமைய வேண்டும். இது சோதனை முறையில் சில பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டது.

சரியான ஆசிரியர்களும், பயிற்சியும் இல்லாத காரணத்தினால் பல பள்ளிகளில் இது கைவிடப்பட்டது. ஆனால், இன்றளவும் வெற்றிகரமாக இந்த மோட்வாடா அரசு பள்ளியில் இது நடைபெறுகிறது.

பெற்றோர் மதிய உணவுக்காக மட்டும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய காலம் மாறி, இன்று மோட்வாடா கிராம பெற்றோர் பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களில் உதவுகின்றனர். இவர்களுக்கு கல்வியறிவு இல்லை என்றாலும், படிக்கும்போது பிள்ளையுடன் அமர்ந்து ஊக்குவிக்கின்றனர்.

படிப்பு மட்டும் அல்லாமல் சுத்தமாக இருப்பது, மரம், செடிகள் வளர்ப்பது என இவர்கள் கற்கும் விஷயங்கள் ஏராளம். இன்று இவர்கள் பள்ளி, அழகான இயற்கை எழில் கொஞ்சும் நந்தவனம். இதற்கெல்லாம் காரணம் அனுஷா தீதிதான் என கூறுகிறார்கள் கிராம மக்கள்.

“ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகம் இருந்தால் உலகையே மாற்றலாம்” என்று கூறியது உண்மைதான் போலும். எல்லாரும் நினைப்பது போல சட்டங்கள் இயற்றுவதில் இல்லை இந்தியாவின் கல்வி வளர்ச்சி. பலரின் சிறு முயற்சிகளில்தான் உள்ளது.

இன்னொரு மாத்தி யோசி ஐடியாதான்  திரைப்படமோ, தொலைக்காட்சியோ பேசப்படும் மொழியிலேயே கீழே வசனங்களை காண்பிப்பது. ஒரு நாளைக்கு புத்தகம் எடுத்து படிப்பவரைவிட டி.வி பார்ப்போரே அதிகம். வாசிக்கும் பழக்கத்தை கொண்டு வர பள்ளிகள் எவ்வளவு முயற்சித்தாலும், 50 சதவீத 5 ஆம் வகுப்பு கிராம்ப்புற மாணவர்களால், 2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட வாசிக்க தெரிவதில்லை.

தொலைக்காட்சியின் சக்தி அபாரமானது. மக்களின் கவனத்தை தக்க வைப்பதில் அதற்கு நிகர் வேறில்லை. மகாராஷ்ட்ராவில் உள்ள சில கிராமங்களில் இதனை செயல்படுத்திய பின்னர், 10-15% அதிகமான மாணவர்களால் சிறப்பாக வாசிக்க முடிந்தது. அனைவராலும் கண்டிப்பாக படிக்க முடியும் என்ற முனைப்புடன் செயல்படுகிறது ''பிரதம்'' எனப்படும் அரசு சாரா அமைப்பு!.

ஐ.மா.கிருத்திகா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close