Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச கல்வியறிவு தினம்... விருது பெரும் அமைப்புகள்!

ன்றைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் படிப்பறிவு இல்லாதவர். அதாவது, கிட்டத்தட்ட 77.5 கோடி பேர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’ என்பர். அப்படிப் பல்வேறு நாடுகளிலும் வறுமை, அறியாமை உள்ளிட்ட பல காரணங்களினால் படிக்க இயலாதவர்களின் கல்விக்கு உதவும் அரசாங்க, தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு ஐ.நா.சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு ஆண்டுதோறும் செப்டம்பர் 8 அன்று பாரீஸ் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் விருதுகள் அளித்து ஊக்குவித்து வருகிறது.

முதலாவது, சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படும் 'கன்ஃபூசியஸ்' பரிசு.( UNESCO CONFUCIUS PRIZE FOR LITERACY) 2015 ஆம் ஆண்டிற்கான பரிசு பெரும் அமைப்புகள்:

1. சிலியில் வல்பரைசோ (VALPARAISO) சிறைக்குள்ளே இயங்கி வருகிறது JUAN LUIS VIVES பள்ளி. 1996 முதல் இயங்கி வரும் இந்தப் பள்ளியால், இதுவரை 2,000 கைதிகள் கல்வியறிவு பெற்றுள்ளனர். 'சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களுக்கான கல்வியறிவு' எனும் திட்டத்தின் கீழ் வல்பரைசோ சிறை மட்டுமன்றி ரான்காகுவா, காஸபிளாங்கா சிறைகளையும் சேர்த்து ஆண்டுதோறும் 150 கைதிகளை மேம்பட்ட மனிதர்களாக உருவாக்கி வருகின்றனர்.2. மடகாஸ்கரின் PLATFORM OF ASSOCIATIONS IN CHARGE OF ASAMA AND POST-ASAMA’ அமைப்பு. 64 சதவிகிதக் கல்வியறிவே உள்ள அந்நாட்டில் அரசாங்கமும், 66 NGOக்களும் இணைந்து இயக்கும் இந்த அமைப்பின் மூலம் 2009 லிருந்து இதுவரை 13,000 பேருக்கு, தொடக்கக் கல்வி முதல் தொழில்நுட்பக்கல்வி வரை பயிற்றுவித்ததுடன் வேலைவாய்ப்பும் அமைத்து தந்துள்ளனர்.

3.ஸ்லோவேக்கியாவின் SVATOBOR அமைப்பு, அந்நாட்டின் ஒடுக்கப்பட்ட நாடோடி வகுப்பினரான ரோமா இனத்தவர்களின் மேம்பாட்டிற்காக ROMANO BARARDO எனும் திட்டத்தின் கீழ் கல்வியறிவோடு, விவசாய முறைகளையும், கிச்சன் கார்டன் முறைகளையும் பயிற்றுவிக்கின்றனர்.

இரண்டாவது விருது செஜாங் மன்னர் பரிசு. (UNESCO KING SEJONG LITERACY PRIZE) தென்கொரிய நாட்டின் நிதியுதவியில் கொரிய எழுத்துமுறையான ஹங்குல்-ஐ உருவாக்கியவரான செஜாங் மன்னரின் பெயரால் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுவோருக்கு வழங்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டிற்கான பரிசு பெரும் அமைப்புகள்:1. இலங்கையின் தேசிய கல்வி நிறுவனம், பாதியில் படிப்பைக் கைவிட்ட குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது மட்டுமின்றி,  சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தொழில்நுட்பப் படிப்புகளையும் பயிற்றுவித்து வருகின்றது.

2. மொசாம்பிக் நாட்டின் ASSOCIACAO PROGRESSO என்ற அமைப்பு,  தாய்மொழிக் கல்வி வளர்ச்சி மற்றும் ஆண், பெண் என இருபாலர் சமத்துவக் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளுக்காக பெறுகிறது.

இந்த 5 அமைப்புகளுக்கும் பரிசுத் தொகையாக தலா 20,000 அமெரிக்க டாலர்களும், பதக்கமும் வழங்கப்படும்.

-யாழினி அன்புமணி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ