Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு மணி நேரத்தில் 1800 செல்ஃபி: உலக சாதனைக்காக முயற்சிக்கும் இளைஞர்!

திகமாக செல்ஃபி எடுப்பது மனநோய்க்கான அறிகுறி. செல்ஃபி ஆர்வத்தால் பொதுமக்களுக்கு இடையூறு, சிறைக்கு அனுப்பிவைத்த செல்ஃபி மோகம் என நாம கேள்விப்படுவது பெரும்பாலும் செல்ஃபிக்கு எதிரான செய்திகளாதான் இருந்திருக்கு.

ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது மாதிரி, தன்னோட செல்ஃபி ஆர்வத்தையே சாதனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த பானு குமார் ரச்சா.

செப்டம்பர் 18 ஆம் தேதி, சிட்டி மாலில் ஒரு மணி நேரத்தில் 1,800 செல்ஃபிக்கள் எடுத்து, கின்னஸ் உலக சாதனை படைப்பதற்காக பதிவு செய்து, ஒப்புதலும் வாங்கிவிட்டார் பானு குமார். 24 வயதான ரச்சா, இதற்கு பயிற்சி செய்வதற்காக, தான் பார்த்து வந்த உதவி ஆய்வாளர் வேலையிலிருந்து விலகி உள்ளார்.

"மே மாதத்தில் ஒரு நாள், ட்வைன் ஜான்சன் என்பவர் மூன்று நிமிடங்களில் 105 செல்ஃபிக்கள் க்ளிக்கி சாதனை படைத்ததை பற்றி கேள்விப்பட்டேன். அப்போதுதான் எனக்குள் இந்த ஐடியா உதித்தது. நான் வேலை செய்யும் இடத்தில் மூன்று நிமிடங்களில் 120 செல்ஃபிக்களை க்ளிக் செய்து எனக்கான களம் இதுதான்  என்பதை உறுதி செய்து கொண்டேன்.

அதன்பின் தேடிப் பார்த்ததில், இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பாட்ரிக் பீட்டர்சன் பதிவு செய்த 1,499 செல்ஃபிக்களே தற்போது உலக சாதனையாக இருக்கிறது என்பது தெரிய வந்தது. அப்போதுதான், இதை முறியடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அடுத்த 20 நாட்களுக்குள் கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்துவிட்டேன். தற்போதுதான் ஒப்புதல் கிடைத்துள்ளது” என்று சந்தோஷப்படுகிறார் ரச்சா.

கைகளுக்கும், மணிகட்டுகளுக்கும் வலுவூட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரச்சா, தற்போது ஒரு மணி நேரத்தில் 1,700 செல்ஃபிக்கள் வரை க்ளிக் செய்ய பழகிவிட்டார். 1,800ஐ தொட்டு விடுவேன் என்று தன்னம்பிக்கை மிளிர சொல்கிறார்!

-நிவேதா அ.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ