Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரே கழிவறை: புதுச்சேரி அரசு அதிரடி!

புதுச்சேரி: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளையே இனி ஆசிரியர்களும், ஊழியர்களும் பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர் குமார், புதுவையில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கழிப்பறை பராமரிப்பு குறித்த வழிகாட்டுதல் தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், " தூய்மை இந்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் சுழற்சி முறையில் பொறுப்பு ஆசிரியர்களை நியமித்து, கழிப்பறைகளை பராமரித்து, அனைத்து கழிப்பறைகளுக்கும் தண்ணீர் வசதி உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கழிப்பறைகளின் பைப் லைன்கள் சேதமடைந்துள்ளதா என்பதை தொடர்ந்து கவனிப்பதோடு, பள்ளி வளாகம் முழுவதையும் தூய்மையாக வைத்து கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கென இருக்கும் கழிவறைகளையே ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும், மாணவிகளுக்கென இருக்கும் கழிவறைகளை ஆசிரியைகளும் பயன்படுத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் கழிப்பறைகள்,  மிக மோசமான சுகாதாரக் கேடுடன் இருக்கும். அதே சமயம் ஆசிரியர்களின் கழிப்பறைகள் மட்டும் எப்போதும் பளிச்சென சுத்தமாக இருக்கும். இதை மனதில் கொண்டுதான் பள்ளிக்கல்வித்துறை அந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் இந்த அதிரடி அறிவிப்பு, ஆசிரியர்கள் மத்தியில் கசப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு, பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 'வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், மிகவும் அபூர்வமாக வரும் இப்படியான ஒழுங்குமுறை அறிவிப்புகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்' என்கிறார்கள் மாணவர்கள்.

- ஜெ. முருகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close