Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபோனை சுற்றி வட்டமடிக்கும் எறும்புகள்! (வீடியோ)

ரு ஐபோன் இருக்கிறது. அதை சுற்றி எறும்புகள் கன்னா பின்னா என சென்றுகொண்டிருக்கிறது.  போன்  ரிங் அடித்து வைப்ரேட் ஆகிறது, உடனே விளையாட்டு மாஸ்டரின் விசில் சத்தத்தைக் கேட்டது போல, எறும்புகள் ஒழுங்காக ஒன்றின் பின் ஒன்றாக 'கோ-ஆர்டினேஷனோடு' வட்டம் அடிக்கின்றன. அத்தனை எறும்புகளில், ஒரு எறும்பு மட்டும் போனின் மேல் ஏறி ஓடுவது சூப்பர் க்யூட்நஸ்.

இந்த வீடியோ, யூடியூப்பில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த அனைவரும், 'அது எப்படி போன் அடிச்ச உடனே, இப்படி எறும்புகள் ஒருங்கிணைந்து சுற்றுகிறது?'  என்கிற ஆச்சரியமடைகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோவை வெளியிட்ட 'வைரல் வீடியோ லேப்' சேனல், "போனில் வந்த இன்-கமிங் காலினால் ஏற்படும் மின்காந்த விளைவே எறும்புகளின் இந்த வித்தியாசமான நடத்தைக்குக் காரணம்" எனக் கூறியுள்ளது.


இது பற்றி இங்கிலாந்து பல்கலைகழகப் பேராசிரியர் நிகல் ஆண்ட்ரு கூறுகையில், ''எறும்புகள் இயற்கையாகவே காந்த உணர்விகளை தங்கள் ஆன்ட்டனாக்களில் கொண்டுள்ளவை. அவைகள் வெகு தூரம் பயணம் செல்லும் போது, பூமியில் இருந்து தனக்குக் கிடைக்கும் காந்த அலைகளைக் கொண்டு தாங்கள் எந்த திசையில் செல்கிறோம் என கண்டு பிடித்துக் கொள்ளும்" என்கிறார்.

இந்த வீடியோ வெளியான ஒரு வாரத்திலேயே, 2 மில்லியன் வியூக்களை அள்ளிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மு.சித்தார்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ