Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலியைக் கொன்று செல்ஃபி; சிறைக்கு அனுப்பிய செல்ஃபி மோகம்!

பீஜிங்; சீனாவில் வாலிபர் ஒருவர் தன் காதலியை கொன்று அந்த உடலுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த வாலிபர் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். 

சீனாவில், கொலை செய்த காதலியின் பிணத்துடன், 'செல்ஃபி' எடுத்த காதலனை போலீசார் கைது செய்தனர். சீனாவின் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவன், குன். இவனது காதலி லின். இருவருக்கும் இடையே தங்கள் காதல் விவகாரம் தொடர்பாக சண்டை ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

அப்போது கோபத்தில் குன் அடித்த அடியில், எதிர்பாராதவிதமாக லின் இறந்து விட்டார். இதை எதிர்பார்க்காத குன் காதலியை கொன்று விட்ட சோகத்தில் வருந்தி அழுதிருக்கிறான். அப்போதும் தன் சோகம் குறையாத குன் அடுத்து செய்ததுதான் அதிர்ச்சியின் உச்சம்.

இறந்த காதலியுடன் உடல் அருகே அமர்ந்து, 'செல்ஃபி' படம் எடுத்துக்கொண்டான். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டான். 'எனது சுயநலக் காதலை மன்னித்து விடுங்கள்' என தான் வெளியிட்ட படத்திற்கு உருக்கமாக தலைப்பும் வைத்தான். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த படம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான புகாரின் பேரில், பீஜிங் காவல்துறை, குன்னை கைது செய்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ