Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஜத்தில் ஒரு 'நாய்கள் ஜாக்கிரதை': பாசம்!

ந்தக் காலத்தில் நாய்களை கண்டாலே கல்லால் அடித்து துரத்திவிடும் பழக்கம் மக்களிடையே பெரும்பாலும் அதிகமாக உண்டு. ஆனால், தன் வீட்டையே ஐந்து நாட்களாக சுற்றி வந்த நாய்க்கு அடைக்கலமும் கொடுத்து தன்னிடம் இருக்கிறது என பேப்பரிலும் விளம்பரம் தந்திருக்கிறார், அண்ணா நகரை சேர்ந்த சதீஷ்.

இந்த செய்தியை கேள்விப்பட்டு சதீஷை சந்தித்து பேசியபோது, ''நான் பிரைவேட் கம்பெனியில மேனேஜராக இருக்கிறேன். நீண்ட நாட்களாக இந்த அண்ணா நகரில் தான் இருக்கிறேன். எப்போதும் காலையில எழுந்து பால் வாங்கி வருவது வழக்கம். அன்றும் வழக்கம்போல நான் பால் வாங்க வெளியே வரும்போது இந்த நாய் என் வீட்டுக்கு வெளியே இருந்தது. பால் வாங்கிட்டு மீண்டும் வீடு திரும்பும்போதும் இந்த நாய் அங்கேயே இருந்தது. ஏறக்குறைய ஐந்து நாட்களாக என் வீட்டுக்கு வெளியே இருந்தது.

நாங்கள் அதன் நிலையை பார்த்து பரிதாபப்பட்டு சாப்பாடு வைப்போம். நாயும் சாப்பிடுவிட்டு எங்களுக்கு நன்றி சொல்வதுபோல் ஒரு பார்வை பார்க்கும். நாய் பார்க்கும் நன்றி மறவாத பார்வையானது எனக்கு மிகவும் பிடித்து போனது. இதுக்கு முன்னால் நான் எந்த பிராணியையும் வளர்க்கவில்லை. எனக்கு பிராணிகளை வளர்க்கும் விதம் பற்றி எதுவும் தெரியாது, ஆனால், சரியாக சாப்பாடு வைத்துவிடுவோம். எங்கள் குடும்பத்தில் ஒரு ஆள் போலவே பழக ஆரம்பித்தது.

அப்போதுதான், எனக்கு நாயை பிரிந்தவர்கள் மீது பரிதாபம் வந்தது. இப்படி பாசமுடன் பழகும் ஒரு பிராணியை தொலைத்து அவர்கள் மனது எவ்வளவு வருத்தப்படும் என்று தோன்றியது. அதனால், நாயினுடைய சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விளம்பரம் செய்தேன். நாயை தேடி இதுவரை யாரும் வரவில்லை. ஆனால், நாயை எங்களுக்கு தருகிறீர்களா என்று கேட்ட ஒரு தம்பதியிடம் கொடுத்து விட்டேன். நாயும் அவர்களோடு பட்டென ஒட்டிக்கொண்டது. எனக்கு மனசு சந்தோசப்பட்டாலும், ஒரு பக்கம் நாயை பிரியும்போது வருத்தமாகவே இருந்தது" என்றார்.

இவரின் உரையாடலைக் கேட்ட நமக்கும் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. நிஜத்தில் "நாய்கள் ஜாக்கிரதை" படத்திலும் வருவதுதான், அப்போது நினைவுக்கு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 20 நாய்களை சுட்டுக்கொன்றவர்கள் மத்தியில் இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துவிட்டு விடைபெற்றோம்!

- துரை.நாகராஜன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ