Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம்; தீர்வு சொல்கிறார்கள் மாணவர்கள்!

ந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சிறைப்பிடிப்பு, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு, இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளினர் என்ற தலைப்புச் செய்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் தஞ்சாவூர் கிங்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு மீனவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற பெரும் உதவியாக இருக்கும் என்கிறார்கள். “மீனவர்களின் படகுகள் சிறைபிடித்து, வலை அறுத்து வீசுகின்ற நிலைக்கு தள்ளப்படுகின்ற மீனவர்களுக்கு, இந்திய எல்லையை தாண்டாமல் இருக்கச் செய்ய முடியும். தினந்தோறும் நாங்கள் எங்கள் கல்லூரி லைப்ரரிக்கு போகும்போது அங்கிருக்கிருக்கும் பத்திரிக்கைகளில் படித்துப் பார்க்கும்போது மீனவர்களின் தலைப்புச் செய்தியை படித்துப்பார்த்து மீனவர்களின் படகுகளை இந்திய எல்லையை நம்முடைய மீனவ படகுகள் தாண்டாமல் இருப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யோசனை வந்தது. அப்பத்தான் எல்லை பார்டர் அலர்ட் என்று பெயர் வைத்து புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க செயல்பட தொடங்கினோம்” என்கிறார்கள் மாணவர்கள் ஜெனிபர் ராபின்சன், ஹரிஹரன் ஆகியோர் இருவரும் ஒரே குரலில். ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முறைகள், பயன்படுத்தப்படும் முறைகள், செயல்களை தொடர்ந்து விவரித்தனர்

“எங்களின் யோசனைக்கு உதாரணமாக மீன் வலையில் மிதக்கும் அந்த பிளாஸ்டிக் நெட்டை வைத்துதான் பிளாக் பாக்ஸை தயாரிக்க முடிவு பண்ணினோம், பிளாக் பாக்சில் 12 வோல்ட் பேட்டரியுடன் பொருத்தப் பட்ட டிரான்ஸ்மிட்டரை பொருத்தி அதை இந்திய எல்லையில் கடலின் மேற்பரப்பிலோ அல்லது கடலின் ஆழப்பகுதியிலோ வைக்கலாம். கடலின் மேற்பரப்பில் அல்லது ஆழத்தில் வைக்கப்பட்ட பிளாக் பாக்சி லிருந்து வெளிப்படும் அலைகற்றை 50 மீட்டருக்கு அப்பால் வரும் மீனவ படகில் பொருத்தப்பட்டிருக் கும்.

ரிலேவுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ள ரிசீவர், அலைக்கற்றையை உள்வாங்கிக்கொண்டு படகில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் முதலில் ஒலிக்கும். அலாரம் ஒலித்தவுடன் மீனவர்கள் படகினை இந்திய எல்லையின் முடிவு வந்துவிட்டது என உணர்ந்து கொண்டு மீனவர்கள் படகினை அந்த பக்கம் செலுத்தாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

அதையும் மீறி மீனவர்கள் இந்திய எல்லையை கடக்க நினைத்தால் தானாகவே படகின் முன்னோக்கி தள்ளும் கருவியை நிறுத்தும் சக்தி கொண்டது நாங்கள் கண்டுபிடித்துள்ள ரிலே கருவி. அதையும் மீறி தாண்ட முயற்சித்தால் படகில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் தானாகவே நின்றுவிடும் என்றனர். எங்களுகடைய இந்த கண்டுபிடிப்பில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மீட்டர் மற்றும் பேட்டரியின் அளவை கூட்டினால் எவ்வளவு தெலைவிலிருந்து இந்த டிரான்ஸ்மீட்டரை (பிளாக் பாக்ஸ்) இயக்க முடியும்.

பிளாக் பாக்ஸில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி செயல்படுத்தினால், மீனவர்கள் எல்லையை தாண்டும் போதோ அல்லது மீனவர்கள் எங்கு செல்கிறார்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

கடல் அளவான மைல் நாட்டிகல் அளவை பயன்படுத்தினால் மீனவர்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். இன்னும் கொஞ்சம் பிளாக் பாக்ஸில் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து, கேமராவை பொருத்தி மாற்றி அமைத்து அதற்கான இணைப்புகளை துறைமுகங்களிலும், காவல்நிலையங்களிலும் பொருத்தினால் மீனவர்களை பூமி யிலிருந்து கடலுக்கு சென்று மீன்பிடிப்பதையும், எல்லை மீறும் மீனவர்களையும், இலங்கை மீனவர்களால் தாக்கப்படும் சம்பவத்தையும், இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் சம்பவத்தையும் உடனுக்குடன் கவனித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கலாம் என்றனர்.

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள், 4142 சதுர கிலோமீட்டர் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

608 மீனவ குக்கிராமங்கள் இருக்கின்றன. தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டுள்ள 5253 விசைப் படகுகள், 30,436 ஃபைபர் படகுகள் தினந்தோறும் மீன்படிக்க சென்று வருகின்றன. பதிவு செய்யப் படாத படகுகளும் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 1 சதவீதம் அளவுக்கு மீனவர்கள் அந்நிய செலவாணியை ஈட்டி வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாணவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பை அரசு செயல்படுத்த முயற்சிக்கலாம்!

- ஏ. ராம்
படங்கள்; கே. குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ