Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகளதிகாரம் - தந்தையை மிரட்டக் கற்றுக்கொள்ளும் சுட்டிக் குழந்தை - வைரல் வீடியோ!

குழந்தைகளின் சிரிப்பைப் பார்க்கவே அழகுதான். இங்கே ஒரு குழந்தைக்கு நகம் வெட்டிவிட தயாராகிறார் தந்தை. காயம்படாமல், வலிக்காமல் வெட்ட வேண்டும் என்று கவனமாக நகத்தைத் தொட, வேண்டுமென்றே சத்தம் போடுகிறது குழந்தை. தந்தைக்கு வரும் சிரிப்பைக் கண்டதும் இன்னொரு 'ஸ்கெட்ச்' போட்டது குழந்தை. 

தான் செல்லமாக மிரட்டினால் தந்தை சிரிக்கிறார் என்று தெரிந்ததும், நகத்தைத் தொடும்போதெல்லாம் வேண்டுமென்றே கூச்சலிட, தந்தைக்கோ சிரிப்போ சிரிப்பு.. பாப்பாவுக்கோ பூரிப்பு! இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இந்த வீடியோ இப்போது மெகா வைரல். சுமார் 20 லட்சம் பேரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது இந்த வீடியோ!

கடைசி வரை நகத்தை வெட்டினாரா என்றுதான் தெரியவில்லை!

தந்தைகளின் உலகம்தான் எவ்வளவு அழகு?! 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close