Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்! (அதிர்ச்சி வீடியோ)

ஜல்பைகுரி: மேற்குவங்க மாநில வனப்பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் யானையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்கள்.

                     

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தனியாக யானை ஒன்று செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தது. யானைக்கு பயந்து கொண்டு அந்த சாலையில் சென்ற வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. ஆனால் அந்த யானை அங்கிருந்து செல்வதாக தெரியவில்லை.

இந்நிலையில், யானை காட்டுக்குள் செல்லும் வரை காத்திருக்க பொறுமையில்லாத இருவர் தங்கள் பைக்கில் யானையை கடந்து செல்ல முயன்றனர். இதை கண்ட அந்த யானை, என்னை மதித்து இத்தனை வாகனங்கள் இந்த சாலையில் நிற்கும்போது, நீங்கள் மட்டும் மதிக்காமல் செல்கிறீர்களா என்று கோபம் அடைந்து அந்த இருவரையும் வாகனத்துடன் வழிமறித்து தாக்கியது.

இதில் அதிர்ஷ்டவசமாக யானையிடமிருந்து இருவரும் மயிரிழையில் உயிர் தப்பி தங்களது இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு தலைதெறிக்க ஹெல்மெட் விழுந்தது கூட தெரியாமல் ஓடினர். உடனே அந்த யானை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அடித்து துவம்சம் செய்தது. அது போதாது என்று அவர்கள் கீழே போட்டுவிட்டு சென்ற ஹெல்மெட்டுகளை மிதித்து நொறுக்கியது.

இந்த சம்பவத்தை கண்டவர்களுக்கு சிரிப்பு வந்தாலும், அனைவரும் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் யானை காட்டிற்குள் செல்லும் வரை அங்கேயே காத்திருந்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ