Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விநாயகருக்கு 8000 கிலோ லட்டு… தொடர் சாதனை படைத்து வரும் இனிப்பு கடைக்காரர்! (வீடியோ)

ந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தபெச்வரம் என்ற இடத்தில்
 நகரில் 80 அடி உயரம் உள்ள வினாயகர் சிலைக்கு 8000 கிலோ எடை கொண்ட லட்டை படைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் சாலடி வெங்கடேஸ்வர ராவ்.

சொந்தமாக இனிப்பகம் வைத்து நடத்தும் இவர், கடந்த நான்கு ஆண்டுகளாவே அல்ட்ரா சைஸ்களில் லட்டை தாயாரித்து, தன் முந்திய சாதனைகளை முறித்து புதிய சாதனைகளை செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

                                 

2011’ல் 5570 கிலோ தான் இவரின் முதல் வெர்சன் லட்டு. அதன் பின் ஒவ்வொரு வருடமும் இவர் படைக்கும்  லட்டின் எடைகள் அதிகரித்து கொண்டே சென்றது. 2012ல் 6599 கிலோ. 2013ல் 7132 கிலோ. 2014ல் 7858 கிலோ என்று அப்கிரேடு செய்தவர், இந்த வருடம் தயாரித்து உள்ள லட்டுக்கு ‘நவ்யாந்திரா லட்டு’ என பெயரும் சூட்டியுள்ளார். இந்த லட்டின் தயாரிப்பு வெரும் 6 மணி நேரத்தில் நடந்துள்ளது.

இதேபோல் 6400 கிலோக்கு வேறு ஒரு லட்டை தயார் செய்து அதை விஜயவாடா பகுதியில் உள்ள 63 அடி வினாயகருக்கு படைத்துள்ளார்.

இனிமேல் வெங்கடாசலபதி மட்டும் அல்ல, வினாயகரும் லட்டுக்கு ஃபேமஸ் தான் போல!

-பி.நிர்மல்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ