Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு சாண்ட்விச் தயாரிக்க 6 மாதம்... அப்படி என்ன ஸ்பெஷல்? ( வீடியோ)

யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ், நம்மூர் உணவான இட்லியோ, தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார்.

இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படிதான் செயல்படுவார். அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி!

இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய அவருக்கு தேவைப்பட்ட காலம் ஆறு மாதம். ஆன செலவு 1500 டாலர்கள்- நம்மூர் கணக்குபடி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்.

என்ன நம்ப முடியவில்லையா? அவர் செய்திருப்பது ஒன்றும் சாதாரண சாண்ட்விச் இல்லை, சாதனை சாண்ட்விச்.


வழக்கமாக சாண்ட்விச்சை எப்படி தயார் செய்வோம்? கடையில் இருந்து பிரெட்,சீஸ் மற்றும் காய்கறிகள் வாங்கி வந்து வைத்துக்கொண்டு சாண்ட்விச் செய்வோம் இல்லையா? ஆனால் ஜார்ஜ் அப்படி செய்யவில்லை; சாண்ட்விச்சை முழுவதும் தானே சொந்தமாக செய்திருக்கிறார். அதாவது, சாண்ட்விச் செய்ய தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் தானே உற்பத்தி செய்திருக்கிறார். அதனால்தான் ஆறு மாத காலம் ஆகியிருக்கிறது.

சாண்டிவிச்சுக்கான பிரெட் செய்ய கோதுமையை விளைவித்து, சிக்கனுக்காக கோழி வளர்த்து,காய்கறிகள் பயிரிட்டு,தேன் அறுவடை செய்து,மாட்டிடம் இருந்து பால் கறந்து சீஸ் தயாரித்து அவற்றை எல்லாம் கொண்டு சொந்தமாக சாண்ட்விச் செய்திருக்கிறார். இவ்வளவு ஏன்? இதற்கு தேவையான உப்பை கூட அவர் கடையில் வாங்கவில்லை, கடலுக்கு சென்று தானே உப்பு தயார் செய்து வந்திருக்கிறார்.

இந்த சாண்ட்விச் பயணம் முழுவதையும் அவர் வீடியோவாக உருவாக்கி யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார். பண்ணையில் இறங்கி கோதுமை பயிரிடுவது,தேனடையில் தேனெடுப்பது என ஒவ்வொரு காட்சியாக டைம்லேப்ஸ் அடிப்படையில் படம் பிடிக்கும் இந்த வீடியோ, யூடியூப்பில் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ஹிட்டாகி இருக்கிறது.

அவசர யுகத்திற்கு ஏற்ப, நிமிடங்களில் தயார் செய்துவிடக்கூடிய உடனடி உணவாக கருதப்படும் சாண்ட்விச்சை உருவாக்க அவர் பாடுபட்டிருக்கும் விதம் பலரை கவர்ந்திருக்கிறது. இந்த பயணத்தில் உப்பை தயார் செய்ய தான் படாதபாடு பட்டதாக ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார். தான் வசிக்கும் இடத்தில் கடல் இல்லாததால், விமானத்தில் பறந்து சென்று பசுபிக் பெருங்கடலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து உப்பாக்கி இருக்கிறார். பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்த போது விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கி தவித்த கதையையும் வீடியோவில் விவரிக்கிறார்.


சாதாரணமாக செய்யக்கூடிய சாண்ட்விச்சிற்காக ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும் என நினைக்கலாம். ஜார்ஜின் நோக்கமும் இதுதான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள் பற்றி எந்த அளவுக்கு சிந்திக்காமல் இருக்கிறோம் என்று உணர்த்தவே இவ்வாறு செய்திருக்கிறார்.


அமெரிக்க வாலிபரான ஜார்ஜ்,  'ஹவ் டூ மேக் எவ்ரிதிங்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் ஒவ்வொரு விஷ்யத்தையும் ஆரம்பம் முதல் அவர் செய்து காட்டி வருகிறார். ஆரம்பம் முதல் என்றால் அந்த பொருளை தயாரிக்க தேவையான ஒவ்வொன்றையும் எப்படி உருவாக்குவது என்று விவரிப்பது முதல் அனைத்து அம்சங்களும் அடங்கும். இந்த வரிசையில்தான் அவர் சாண்ட்விச்சை ஆரம்பம் முதல் செய்து காட்டியிருக்கிறார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்கள் பற்றி எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறோம் என்று உணர்த்துவதே அவரது யூடியூப் சானலின் நோக்கமாக இருக்கிறது. இதை,  சாண்ட்விச் தயாரிப்பு மூலம் அவர் உணர்த்தியிருக்கிறார். பொதுவாக நம்முடைய மேஜை மீது இருக்கும் உணவு எப்படி எல்லாம் நம்மை வந்தடைகிறது என்பது குறித்து நாம் அதிகம் அறிவதில்லை என்று சொல்லப்படுகிறது. அது எத்தனை உண்மை என ஜார்ஜ்,  யூடியூப் வீடியோ மூலம் உணர்த்தியிருக்கிறார்.

ஜார்ஜின் வீடியோவை பாருங்கள்; சாண்ட்விச்சை செய்ய மட்டும் அல்ல; வாழ்க்கையையும் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம்.

ஆண்டி ஜார்ஜ் யூடியூ சேனல்:http://www.makeeverything.tv/

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ