Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தண்ணீரை சுத்தப்படுத்த சோளக்காம்பு! - கூகுள் அறிவியல் விருது வென்ற 13 வயது மாணவி!

சோளக் காம்பு  மூலம் தண்ணீரை சுத்தப்படுத்தும் புதிய தொழில் நுட்பம் ஒன்றை கண்டுபிடித்து, 'கூகுள் சயின்ஸ் ஃபேர்' (Google Science Fair) போட்டியின் விருதை வென்றுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீ சாய் லலிதா.


13 வயது விஞ்ஞானி

13 வயதான ஸ்ரீ சாய் லலிதா, டெல்லி பப்ளிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயில்கிறார். இவரது கண்டுபிடிப்புக்குதான் இந்த விருது கிடைத்துள்ளது.

சாய் லலிதாவின் கண்டுபிடிப்பின் சூத்திரம் நாம் அலட்சியமாக தூக்கி எறியும் சோளக் காம்பில்தான் அடங்கி உள்ளது.  


சோளம்

"மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களின் வாழ்வாதாரமான விவசாயத்தில் கோதுமை, அரிசிக்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது சோளம். இளம் சோளத்தை உணவாக உபயோக்கும் போது முதிர்ந்த சோளம் பயனற்று உயிர் கழிவாகப் போகிறது. இந்த சோளக் காம்பு முனையை விலங்குகள் கூட உட்கொள்வதில்லை. காரணம் அது உணவுக் குழாயை அடைத்து, இறப்பைக் கூட ஏற்படுத்திவிடும்.



ஆராய்ச்சி

இந்நிலையில் Adsorption என்னும் தொழில்நுட்பத்தை சோளக் காம்பில் பயன்படுத்தி,  தண்ணீரில் உள்ள கழிவுகளை அகற்றும் முறையை கண்டு பிடித்திருக்கிறார் ஸ்ரீ சாய் லலிதா. மூலக்கூறுகள், அணுக்கள் முதலியன மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதே Adsorption முறையாகும். வீட்டு, தொழிற்சாலை கழிவுகளை எளிமையாகவும் மலிவாகவும் சுத்தம் செய்ய சோளக் காம்பு முனையை பயன்படுத்தலாம்.


“எனது ஆராய்ச்சிற்காக உள்ளூர் விவசாயிகளிடமிருந்து சோளக் காம்பு முனைகளை வாங்கி, அதனை கடும் வெயிலில் சுமார்  ஒரு மாதம்  காய வைத்து,  நார்க்கழிவுகளை அகற்றியப் பின், மறுப்பக்கம் ஓட்டை விழாத வகையில் நடுவில் ஓட்டைப் போட வேண்டும். பின் கழிவு நீரை அந்த ஓட்டையின் வழியே விட வேண்டும். சோளக் காம்பு முனை வழியாக அந்த கழிவு நீர் சென்று வந்த பின், இறுதியாக கிடைக்கும் நீர் கலவை வெவ்வேறு  பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தூய்மையான நீர் கிடைக்கப்பெறும்" என்கிறார் சாய் லலிதா.

எப்படி செயல்படுகிறது?

* இந்த சோளக் காம்பு முனை கட்டமைப்பை வீட்டின் பைப்புகளில் பொருத்தும் போது 80 சதவித நச்சுத் தன்மை கொண்ட கழிவுகள் உறியப்படும்.

* தொழிற்சாலைகளில் இதனை உபயோகிக்கும் போது, பல TSS சார்பு கரிம மற்றும் கனிம நச்சுகளை உறிஞ்சி விடும்.

* மூங்கில் கம்பில் இதனை பொருத்தி குளத்தில் வைத்தால், அது  நீரில் கலக்கும் நச்சுக்களை அகற்றி அக்குளத்தின் வெப்ப நிலையையும் குறைக்கும்.

இந்நாள் வரை உயிர் கழிவாக கருதப்பட்ட சோளக் காம்பு முனையை மேற்கூறிய முறையில் உபயோகித்தால்  பல நீர் நிலைகள் காப்பாற்றப்படும்.

 


ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ