Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைரல் ஆகும் 6 வயது சிறுமியின் அறிவுரை வீடியோ!

தன் அப்பாவும், அம்மாவும் விவாகரத்தாகி பிரிந்து விட்டார்கள். அவர்களை ஒன்று சேர்ப்பதற்காக, தன் தாயின் மனதை மாற்றுவதற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த  டியானா என்ற சிறுமி பேசும்பொழுது எடுக்கப்பட்ட வீடியோதான் இது.

அந்த சிறுமி பேசும் விதமும் வார்த்தைகளும், பார்க்கும் அனைவரின் முகத்திலும் கட்டாயம் புன்னகை பூக்க செய்து விடும்.

அந்த வீடியோவில், " நீயும் அப்பாவும் எப்பொழுதும் நண்பர்களாக இருக்க வேண்டும்.  எனக்கு நீங்கள் பிரிந்து இருப்பதை பார்ப்பதில் விருப்பம் இல்லை. அதற்கு ஒருவரை ஒருவர் அனுசரித்து போக வேண்டும்" என இந்த சிறுமி கூறும் பொழுது, 6 வயது சிறுமிக்கு வாழ்க்கை பற்றிய இந்த ஞானம் எங்கு இருந்து வந்தது என்ற  ஆச்சரியம் நிச்சயம் நம் கண்களில் எட்டிப் பார்த்து இருக்கும்.

செப்டம்பர் 16 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு, இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ள அந்த வீடியோ இங்கே...

பி.நிர்மல்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close