Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகள் அல்லவா முதியோர்கள்...!

னிதனுடைய வளர்ச்சியை 3  காலகட்டங்களாக பிரிக்கலாம். குழந்தை பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம். 60 வயதை கடந்தவர்கள் முதுமை பருவத்தினராக அறியப்படுகிறார்கள் அல்லது மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நம்மை குழந்தையிலிருந்து பாதுகாத்து சீராட்டி வளர்த்த நம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் அடைக்கலாமா?அவர்கள் நம் தலைமுறையின் ஆணிவேர்கள். இவர்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அக்டோபர் 1 உலக முதியவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

1990- ம் ஆண்டு ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இது கடைபிடிக்கப்படுகிறது 1991லிருந்து ஒவ்வொரு ஆண்டும் முதியவர்கள் தினம் கடைபிடித்து வருகிறோம்.கடந்த 2002-ம் ஆண்டு முதியவர்களுக்கான புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு முதியோர் நலன், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 60கோடி முதியவர்கள் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த முதியவர்கள் தினம் கடைபிடிக்கிறோம்?

இன்று முதியவர்களின் நிலை சமூகத்தில்  மிகவும் மோசமாக உள்ளது.


முதியவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னைகள்:

வயதான காலத்தில் வரக்கூடிய உடல்நலம் சார்ந்த பிரச்னைகளும், மனநலம் சார்ந்த பிரச்னைகளும்தான் இவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகள். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இவர்களை மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்ல யாரும் இல்லை. தினம் தினம் அரசு மருத்துவமனைகளில் பார்க்கலாம், பல முதியவர்கள் வெயில் என்றும் பாராமல் காத்துக் கிடந்து மருந்து மாத்திரைகள் வாங்கிச் செல்வர். இதில் பலபேர் வீட்டில் உறவுகள் இருந்தும் தனிமையில் வந்திருப்பர்.

அடுத்ததாக இவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னை மரியாதைக் குறைவு.'நீ எல்லாம் இருந்து என்ன  பண்ண  போற... பேசாம செத்து தொலைய வேண்டியதுதானே..?' போன்ற வசவுகள். பேருந்தில் பயணம் செய்ய சென்றால் அங்கு 'நீயெல்லாம் வரலனு யார் அழுதா..? இங்க வந்து நம்ம உயிர வாங்கிக்கிட்டு' என்ற வசனங்களை கடந்துதான் செல்கிறார்கள்.

இவ்வாறு செய்வதால் என்ன பயன். இவர்கள் யார்? அனுபவத்திலும் ,வயதிலும் மூத்தவர்கள்.
இளைமையின் வாழ்கையை பிள்ளைகளுக்காக செலவழித்துவிட்டு கடைசியில் ஓய்வு எடுக்கும் இவர்களின் உலகம், வேறு எந்நேரமும் தன்னையொத்த வயதினரிடம் கலகலப்பாக பேசி மகிழ்ந்து, பழைய நினைவுகளை மெல்ல அசைபோட்டு, புதுமையை பார்த்து வியப்படைவர். இவர்களுக்கு தேவை அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. ஆதரிக்க மகன் இருந்தும், அன்பு காட்ட எவரும் இல்லையே என்று புலம்புகின்றனர்.இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது:

மதிக்கப்பட வேண்டியவர்கள் இன்று மிதிக்கப்படுகிறார்கள். மூத்த குடிமக்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் நம்மை விதைத்த விதைகள். மகன்கள் தன் பெற்றோரை தனிமையில் விடாமல் தன்னுடன் வைத்து பாதுகாக்க வேண்டும். சிறிய வயதில் நமக்கு ஒன்று என்றால் துடித்த தந்தை, இப்போது குழந்தை. அவருக்கு உடல்நலமில்லை என்றால் நாம் அருகில் இருந்து கவனித்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

நாமும் ஒரு நாள் முதியவனாகும் காலம் வரும். அன்று நமக்கு இதே நிலைமை நம் பிள்ளைகளால் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? இதை உணர்ந்து செயல்பட்டாலே கண்டிப்பாக காப்பாற்றும் உணர்வு வரும். முதலில்  செய்ய வேண்டியது நம் பெற்றோரை இல்லங்களில் சேர்த்திருந்தால்.அவர்களை அழைத்து வந்து தன்னுடன் வைத்து, கடைசி காலங்களில் பேணி காத்திடுங்கள்.

இது நம் கடமை. தன் மகன் தன்னிடம் ஒருநாள் பேசாமல் இருந்தாலும் தவித்திடும் தாயை பிரிந்து இருப்பதை காட்டிலும், அவர்களை ஆதரித்து அன்பு செலுத்துங்கள். இந்த முதியவர்கள் தினம் மூத்தக் குடி மக்களுக்காக கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கென பல்வேறு சலுகைகள் உள்ளன. ஆனால் அதை அனுபவிக்க முடியாதா நிலைதான் இங்குள்ளது.

இனிமேலாவது தன்னுடைய பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் அவர்கள் மரியாதையாக மதிக்கப்படவேண்டும். அவர்களின் மனதை புரிந்து அன்பு செலுத்தினாலே போதும்.

இன்று முதியவர்கள் தினம். இன்றிலிருந்து முடிவெடுத்து, 'முதியோர்களை மதிப்போம்; அவர்களை பாதுகாப்போம்!' என்று உறுதிமொழி ஏற்போம்.

- த.எழிலரசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close