Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாசா சவாலின் முதல் பத்தில் இரு இந்திய வம்சாவளியினர்!

நாசா நடத்திய ’3டி ஸ்பேஸ் கண்டெய்னர்’ சவாலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர், முதல்  10 பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அரிசோனாவில் வாழும் ராஜன் விவேக்கும், டெலாவரில் வாழும் பிரசன்னா கிருஷ்ணமூர்த்தியும் நூலிழையில் முதல் பரிசை தவற விட்டாலும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக புதுமையான இரு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர். இதில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் பதின்ம வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.



பூமியில் மிகவும் சாதாரணமாக நாம் செய்யும் செயல்கள் கூட விண்வெளியில் சவால் நிறைந்ததாக இருக்கும். உதாரணமாக நம் உடைந்த நகங்கள் கூட விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் பெரிய ஆபத்தை விளைவிக்கலாம். அதற்கு தீர்வாக கண்டுபிடிக்கப்பட்ட ’க்ளிப்கேட்ச்’ எனும் சாதனத்துக்கே முதல் பரிசு வழங்கப்பட்டது. வெட்டப்பட்ட நகத்துண்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் இடத்தை அடைக்காத இக்கருவியை கண்டுபிடித்தவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியான் பீம்.

 ராஜன் கண்டுபிடித்தது ‘ஹைட்ரோபோனிக் கண்டெய்னர்’ என்னும் மைக்ரோக்ராவிட்டியில் நீர் சேமித்து வைக்கும் கண்டெய்னர்.

இதன்மூலம் விண்வெளியில் மண் இல்லாமல் செடிகள் விரைவாக வளரும். பிரசன்னா விண்கலத்தின் குறைவான இடத்தை கருத்தில் கொண்டு, சுருங்கக்கூடிய ’கம்ப்ரெஸிபிள் கண்டெய்னரை’ கண்டுபிடித்துள்ளார். பொருட்களுக்கு ஏற்றாற்போல் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டும், பொருள் ஏதும் இல்லாதபோது இடத்தை அடைக்காமல் சுருங்கிக்கொள்கிறது.

வெற்றியாளர்களை அறிவித்துவிட்டு நாசாவின் இன்-ஸ்பேஸ் ப்ராஜெக்ட் மேனேஜர் நிகி வெர்கெய்ஸர் பேசும்போது, “அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களை 3டி ப்ரிண்ட் செய்துகொள்ளும் தொழில்நுட்பம் மட்டுமே விண்வெளியாளர்களுக்கு போதாது. அங்கு அவர்களின் ஒவ்வொரு நாளையும் இனிமையாக மாற்றுவதும் எங்கள் பணியாகும்” என்றார்.

- நிவேதா அ.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close