Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பாரம்பரிய உணவிற்கு குழந்தை பருவத்திலேயே தயார்படுத்த வேண்டும்!'

தினம் வரும் சில ஆய்வுகளைப் பார்த்தால் நாம் தினமும் சாப்பிடுவது உணவா இல்லை விஷமா என்ற பயத்திலேயே சாப்பிட வேண்டியதாய் இருக்கிறது.  இப்போது வரும் பெரும்பாலான ஆய்வுகள் வலியுறுத்துவது எல்லாம் இயற்கை உணவைதான், அதாங்க ஆர்கானிக் ஃபுட்!

இந்த இயற்கை உணவை  குழந்தைப்பருவம் முதலே தயார்படுத்தினால், அடுத்த சந்ததியினராவது  அதிக நோய் பயமின்றி வாழ முடியும் என்கிறார் 'வேர்' என்ற பெயரில் இயற்கை உணவு பொருட்களை தமது ஸ்டோரில் மட்டுமல்லாது, இணையதளத்திலும் விற்கும் 'வேர்' நிறுவனத்தின் ஸ்ரீராம் நாராயணன்!

அமெரிக்காவில் தன் மனைவியுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் இவர். தன் இரண்டு வயது மகனை வளர்ப்பதற்காக இந்தியா வந்தவர், இங்கு ‘மண் வாசனை’யை உணர்ந்து ‘வேர்' ஐ தேடத்தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது. அவரிடம் தொடர்ந்து பேசுகையில்..

இந்த காய்கறி எல்லாம் எங்கிருந்து பெறப்படுகிறது?


நாங்கள் முக்கால் வாசி பொருட்களை விவசாயிகளிடம் இருந்தே பெறுகிறோம். எங்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, ஓசூர், சென்னை அருகில் உள்ள சில ஊர்கள் என பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள், அரிசி, சிறுதானியங்கள் போன்ற அனைத்தும் வருகின்றன. சிலவற்றை பெங்களுரு போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பெறுகிறோம். அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் பல விவசாயிகளின் கூட்டு மையம் இருக்கும். அவர்களிடம் இருந்தும் பெறுகிறோம்.

 
இந்த தொழில் லாபகரமானதாக உள்ளதா?

நாங்கள் லாபத்தை மையப்படுத்தி இதனை தொடங்கவில்லை. ஏனெனில் நாங்கள் இருவருமே இதை மிகவும் passion உடன் செய்பவர்கள். எங்கள் சொந்த வாழ்க்கையிலும் கூட நாங்கள் இயற்கை உணவையே உண்கிறோம். இயற்கை மருந்தையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

ஆர்கானிக் பொருட்கள் விலை அதிகமாக இருக்கிறதே?
   
ஆம். அது உண்மைதான். ஆனால், இதுவே உடல் நலத்திற்கு உகந்தது. நஞ்சு உள்ள காரட் 50 ரூபாய், நஞ்சு இல்லாதது 100 ரூபாய் என்றால், நஞ்சு இல்லாததுதானே வாங்க முடியும்? அளவை வேண்டுமானால் குறைத்து நம்மிடம் இருக்கும் ரூபாய்க்கு ஏற்றது போல் வாங்கி கொள்ளலாம். என்னிடம் இவ்வாறு கேட்கும் அனைவரிடமும் இயற்கை முறை விவசாயத்தையும் அதன் தயாரிப்பு முறைகளையும் பற்றி விவரிப்பேன். நான் இயற்கை முறை விவசாயத்தில் உற்பத்தி முறையை நேரடியாகப் பார்ப்பவன். நான் விவரிப்பதை பார்த்தே எங்களிடம் பகுதி நேரமாக வேலைப் பார்ப்பவர்கள் கூட, அவர்களின் வருமானம் குறைவு என்றாலும் கூட ஆர்கானிக் பொருட்களையே வாங்கத் தொடங்கி உள்ளனர்.

இதன் விலை அடித்தட்டு மக்களும் வாங்கும் விதமாக குறைய வேண்டும்; குறையும். இன்னும் சில வருடங்களில் ஆர்கானிக் பொருட்கள் இன்றிருக்கும் 'நான் ஆர்கானிக்' பொருட்களின் நிலைக்கு  வந்துவிடும். இன்னும் சில வருடங்களில் 'நான் ஆர்கானிக்' என்று டேக் செய்யப்படும். சிகரெட் பாக்கெட்டுகளில் எப்படி இது உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகங்கள் வருகின்றனவோ அதே போல் 'நான் ஆர்கானிக்' பொருட்களில் அத்தகைய வாசகத்தைப் பார்க்கலாம்” என்று பெருமூச்சு விடுகிறார்.


வாடிக்கையாளர்களிடம் இதற்கு எப்படி வரவேற்பு உள்ளது?

"நம் எல்லாருடைய நாக்கும் கெட்டு விட்டது. நாம் முன்னூறு நானூறு வருடங்களாக அரிசியை சாப்பிட்டு வருகிறோம். அரிசியை விடுவது அவ்வளவு எளிதல்ல. பாரம்பரிய அரிசியை சாப்பிடலாம். இது மாற இன்னும் ஐந்தில் இருந்து பத்து வருடமாவது ஆகும். எங்கள் கடையில் கோதுமை மற்றும் சர்க்கரை இல்லாத பிஸ்கட் விற்கிறோம். அதை என் மகன் சாப்பிட மறுக்கிறான். ஏனெனில், அவனது மூன்று வயது வரை அவன் அதை ருசித்தது கிடையாது. ஆனால், என் கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஆறே மாதம் ஆன ரெட்டைக் குழந்தைகளுக்கு அந்த பிஸ்கட்டையே தருகிறார். அவர்கள் இப்போதிலிருந்தே ஆர்கானிக்கிற்கு பழக்கப்படுத்தப்படுவதால் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்கள் இதற்கே பழகிக் கொள்வார்கள். மற்ற 'நான் ஆர்கானிக்' அவர்களுக்கு வித்தியாசமானதாகத் தோன்றும். இப்பொழுது ஒரு தலைமுறையையே மாற்ற வேண்டும்.

சிறு தானியங்களில் இருந்து இப்போது பால் கூட எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். சிறு தானியங்களை பெரும்பாலும் உடல் நிலை சரி இல்லாதவர்கள் மட்டுமே உண்பார்கள். அதிலும் சிலர் நான் உயிருடன் இருக்கும் வரை ருசியாக உண்ண வேண்டும் என்கின்றனர்.

எங்களுக்கு நான்காயிரம் கஸ்டமர்கள் உள்ளனர். என்னையும் சேர்த்து பதினைந்து பேர் இங்கு வேலை பார்க்கிறோம். ஒரு விற்பனையாளராக அல்லாமல் ஒரு வாடிக்கையாளராக நான் மிகவும் தெம்பாக உணர்கிறேன். மேலும் மக்களும் விழிப்புணர்வு பெற்று, சிறுதானிய இயற்கை பாரம்பரிய உணவுகளுக்கு மாற வேண்டும்; மாறுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் நாராயணன்!

ரமணி மோகனகிருஸ்ணன்
படங்கள் அசோக் குமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ