Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகில் 50 சதவிகிதம் மக்களின் ஒரு நாள் வருமானம் ரூ.150-க்கும் கீழ்!

"வறுமையே உனக்கு ஒரு வறுமை வராதா?" என்று எண்ணி, தனது சிறுவயதில் இருந்தே வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனப் போராடிய ஜோசப் ரெசின்கி  என்பவரால், 1987-ம் ஆண்டு அக்டோபர் 17 அன்று  முதன்முதலாக  உலக வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிக்கவும்  1992-ம்  ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில், சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைப்பு வறுமை ஒழிப்பு நாளை  அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும்  ஐ.நா சபை வலியுறுத்துகின்றது.

"ஒருவர் கூட வறுமையில் இருக்கக் கூடாது. வறுமையினால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: யோசித்து முடிவெடுத்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல்" என்பதை மையக்கருத்தாக  கொண்டு இந்தாண்டு வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

வறுமை என்பது உணவு, உடை ,உறைவிடம் ,பாதுகாப்பான குடிநீர், மருத்துவம், சுகாதாரம், கல்வி கற்கும் வாய்ப்பு , பிற குடிமக்களிடம் வாழ்க்கை தரத்தை இழந்த நிலை போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள். பட்டினியும், வன்முறையும் வறுமைக்கு வழிவகுக்கிறது.

எய்ட்ஸ், மலேரியா, டிபி போன்ற கொடிய நோய்களை விட வறுமையினால் மரணமடைந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். உலகில் 87 கோடி மக்கள்  உணவின்றி வறுமையினால் பாதிக்கப்படுகின்றனர். 100 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. இதில் 40 கோடி சிறுவர்கள். 160 கோடி மக்கள்  மின்சார வசதி இல்லாமல் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் மக்களின்  ஒரு நாள் வருமானம் 150 க்கும்  கீழ் உள்ளது.15 சதவீதம் மக்களின்  வருமானம் 75 ரூபாய்க்கும் கீழ் உள்ளது. காரணம் அரசியல் வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது போன்றவைதான். மக்கள்  ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஏழைகளின் பசியை போக்க எந்த அரசுக்கும் அக்கறை இல்லை என்பது முக்கிய காரணம்.

உலகின் வறுமை நிலைக்காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் செய்திடல் வேண்டும் என்றெண்ணி அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்ஙேறு வேலை திட்டங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளனர். பசி, வறுமை, வன்முறை ,பயம்  இவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கும் விதத்தில் 100000 மக்கள் டொர்கேட்ரோவின்  மனித உரிமைகள் மற்றும் விடுதலை  சதுக்கத்தில் ஒன்று கூடினார்கள்.

வசதிபடைத்தவர்கள்  மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி வரவர அதிகரித்துக் கொண்டே வருகிறது. அபிவிருத்தி அடையாத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகின் முதல் மூன்று பணக்காரர்களின்  சொத்து மதிப்பை விட குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் 20 சதவீதம்  பேர் உலக வளங்களில் 86 சதவீத்த்தை கைப்பற்றியுள்ளார்கள். 80சதவீதம்  மக்களுக்கு கிடைப்பது  வெறும் 14சதவீதம்  மட்டுமே! உலக வங்கி தரவுப்பட்டியலின்படி 1.4 பில்லியன்  மக்களே  வறுமை  கோட்டிற்கு கீழ்  உள்ளனர்.

உலக   வங்கியின் 185 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச நிதியத்தின்  அதிகாரிகள்  கலந்து கொண்ட நிதி மற்றும் வளர்ச்சி துறை மாநாட்டில்,  நிதி நெருக்கடி நீண்ட காலத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் உலக வங்கிக்கான வளங்களை  மேலும்  அதிகரிக்க வேண்டிய  தேவை ஏற்படலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிலவும் பொருளாதார பின்னடைவின்  காரணமாக முன்னேறிய  நாடுகளில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் ஆடம்பர வாழ்க்கை,  ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக  இருக்கும் என்று  பொருளாதார  நிபுணர்கள் கூறுகின்றனர்.

வறுமை கோட்டிற்கு  கீழேயுள்ள  குடும்பங்களின் வருவாய் 65 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் விவசாய உற்பத்தி 149 சதவீதம் உயர்ந்துள்ளது  என்றும்  விவசாயத்திற்கான பாசன பரப்பு 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் சில புள்ளி  விவரங்கள்  எடுத்துக்காட்டுகின்றன. அதே  அடிப்படையில்  மாவட்ட வறுமை ஒழிப்பு  திட்டம்-2 என்ற பெயரில் 5000 கிராமங்களுக்கு  விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கெனவே  உலக வங்கியின் தனிநபர் மேம்பாட்டு கணக்கு  திட்டத்தின்  கீழ்  100  மில்லியன்  டாலர் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளதாக உலக வங்கியின் இந்திய கிளையின்  இயக்குனர்  ராபர்ட்டோ ஜாகா  மும்பையில்  தெரிவித்திருந்தார்.

ஏழ்மைக்கு  முக்கிய காரணம் ஊழல். உரிய நாடெகளின் முன்னேற்றத்திற்கு  தடையாக உள்ள  ஊழலை  வளர்ந்த நாடுகளின்  பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. அதிகாரிகளை வளைக்கவும் ஒப்பந்தங்களை  கைப்பற்றவும்  செலவிடும் இந்த நிறுவனங்கள்  ஏழை  குடிமக்களின் வரிப்பணத்தை  தெரிந்தே சுரண்டுகின்றனர். குற்றங்கள்  அதிகரிக்க வறுமையும் ஒரு காரணம் என்பது  மறுக்க முடியாத உண்மை.  இந்தியாவில் வறுமைக்கு  முக்கிய  காரணம்  இங்குள்ள   சாதி அமைப்புகள்தான். உயர்  சாதி அமைப்புகள் அதிகாரத்தை கையில் எடுத்துக்  கொண்டு பிற  மக்களை  தங்களுக்கு  சமமாக வரவிடாமல்  காலங்காலமாக தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். சமூக  நீதியை நிலை  நிறுத்தி,  மக்களின்  வாழ்வாதாரங்களை  சீர்திருத்த  தென்னிந்தியாவில்  தந்தை  பெரியாரும்,  வட இந்தியாவில்  டாக்டர் அம்பேத்கர்  போன்றோரும்  பலத்த  எதிர்பிற்கிடையே தங்களுடைய  பணியைத்  தொடர்ந்தனர். ஆனாலும் அவர்கள்  விட்டுச்சென்ற  சமூக  நீதி பணிக்கு இன்றும்  உயர்சாதி  வர்க்கம்  பெரிதும்  தடையாக உள்ளது. வறுமையும் ஏற்றத்தாழ்வுகளும்  நிறைந்த  சமூகத்தில், வன்முறையையும்  குற்றங்களையும் தவிர்க்க  முடியாது.

வறுமையில் இருப்பவர்களை  ஒரே நாளில்  வசதியானவர்களாக  மாற்றிட  முடியாது  ஆனால்  இப்போதிலிருந்தே  பல  தொலைநோக்கு  திட்டங்களை  தீட்டினால்  வரும்  சந்ததியினர்  ஏழ்மை நிலையில்  இருக்காமல்  தடுக்கலாம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  வழங்கினால்  வறுமை  ஒழியும். வறுமை வெறும்  பணம்  இல்லாததால்  மட்டுமல்ல  உழைப்பின்மை, பகிர்ந்து  உண்ணும்  மனப்பான்மையின்மை, பொது நலப்பான்மையின்மை,  நேர்மையின்மை ,  உழவுத்தொழில்  புறக்கணிப்பு  போன்றவையும்  வறுமைக்கு  காரணம்.

வறுமைக் காரணமாக மரணமடைந்தவர்களுக்கு  மரியாதை  செலுத்தும்  விதமாகவும்,  பசிக்கொடுமையிலிருந்து  மக்களை விடுவிக்கவும்  இன்று  வறுமை  ஒழிப்பு  தினம் கொண்டாடுகிறோம்
   
த.வினோதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close