Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு ஆன்லைன் ஷாப்பிங் கிறுக்கனின் அனுபவம்!

மிழ்நாட்ல குறிப்பா, சென்னைல ஆன்லைன்ல பொருட்கள் வாங்குறவங்க எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது. சின்ன சின்ன பொருட்கள்ல ஆரம்பிச்சி இப்போ டிவி, கார் வரை வாங்க ஆரம்பிச்சாச்சி. இப்போ கர்சீஃப் ல இருந்து காய்கறி வரை ஆன்லைன்ல எல்லாத்தையும் வாங்குறவங்க நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்காங்க.
 
ஆனா இந்த ஆன்லைன் ஸ்டோர்கள் நம்மள மனுஷங்களாவே மதிக்கிறதில்லங்குறதுதான் உண்மை. ஆன்லைன்ல நாம ஏதாவது பொருள் வங்கினா, அத பக்கத்துல இருக்கிற அண்ணாச்சி கடைல ரிட்டன் பண்றமாறி திருப்பிக் கொடுக்க முடியாது. மெயில் பண்ணி அந்த பொருள அவங்களுக்கு போஸ்ட் பண்றது, (சில நேரம் ஃபோன் பண்ணுனா அதுவும் 1008 போன் கால்ஸ், வாங்கிட்டு போவாங்க) . அப்புறம் பணம் ரிட்டன் வாங்குறதுனு எக்கச்சக்க கடுப்புகள்.
 
ஆனா அதையெல்லாம் விட கடுப்பு, அவங்க போடுற ஆஃபர்ஸ். அட! ஆஃபர் போட்டா சந்தோஷம்தானே படணும்? வொய் கடுப்பு?

 


மொதல ஆஃபர் னு போடுவாங்க! ஆஃபர ப்ளேஸ் பண்ண முடியாது. இதுல அவங்களுக்கென்ன லாபம்? ஒரு வெப்சைட்ட ஓபன் பண்ணிணாலே எக்கச்சக்க பணம் அவங்களுக்கு கெடைக்கும். அதுவும் மொபைல் ஆப் ல ஓபன் பண்ணுனா எக்கச்சக்கம். அதுனாலதான் மொபைல் ஆப்க்கு அதிக ஆஃபர் போட்டு நம்மள ஏமாத்துறாய்ங்க...!
 
அடுத்து நீங்க ஆஃபர் ப்ளேஸ் பண்ற வரை ஒரு பணமும், கடைசியா பில் பே ஆகும் போது அத விட டபுள் மடங்கு பணம் போறதுனு இன்னொரு வகைல ஏமாத்துறாய்ங்க. அப்படி அதிக 'அல்பம் ஆன்லைன் ஸ்டோர் 'அவார்ட வாங்குறது ஃப்ளிப்கார்ட்.
 
இப்போ அதுக்கும் மேலங்குற மாதிரி,  அமேசான் ஒரு வேலை செஞ்சிருக்கு. ஒரு குறிப்பிட்ட ரூபாய்க்கு பொருள் வாங்கினா கூப்பன். அந்த கூப்பன குலுக்கல் முறைல தெர்ந்தெடுத்து தங்கம். இதப்பத்தி எக்கச்சக்க விளம்பரம் வேற. அட! இதுல என்ன பிரச்சன?
 
கூப்பன வாங்க முதல் கண்டிஷனே தமிழ்நாட்ட சேந்தவனா நீ இருக்க கூடாதுங்கறதுதான். தமிழ்நாட்லயே விளம்பரம் பண்ணி இப்படி ஒரு கண்டிஷன் வேற. நம்ம கண்டிஷன படிக்க மாட்டோம்னு அவ்ளோ நம்பிக்கை. நம்ம ஆளுங்கள எல்லாம் கேனப்பசங்க னு நினைச்சுட்டாய்ங்களோ என்னவோ.... இப்போ ஆஃபர் ப்ரொட்டெஸ்ட் அன்ட் ஆல் ஆன பிறகு, அந்த விளம்பரத்த ரிமூவ் பண்ணி இருக்காய்ங்க.
 
மொதல்ல நம்ம ஊரு வணிகர்கள் வயித்துல அடிச்சி இப்போ நம்மளையும் ஏமாத்துறாங்க இந்த ஆன்லைன் ஸ்டோர் காரவங்க. இத நம்ம மக்கள் மொதல உருப்படியா புரிஞ்சிக்கணும்.

இப்படிக்கு- ஆன்லைன் ஷாப்பிங்கில் நொந்து போயி இருக்குற ஷாப்பிங் கிறுக்கன்!
 
-ரமணி மோகனகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ