Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை மாணவர்களிடம் உரையாற்றிய காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர் பராக் பட்!

மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர், பராக் பட். தென்னாப்பிரிக்கா, கென்யா, டான்சானியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு,  பல்வேறு காட்டுயிர் ஒளிப்படங்களை கிளிக்கியவர்.

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவாக் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்டுயிர் ஒளிப்படக்கலை பயிற்சி வகுப்பில்  இக்கலையை அறிமுகப்படுத்தி, ஒளிப்படக்கருவியில் உள்ள அமைப்புகளை, சென்னையை சேர்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விளக்கினார் பராக் பட்.

தன்னுடைய ஒளிப்படங்களை, திரையில் மாணவர்களிடம் காட்டியபடியே அதிலுள்ள ஒளி, நிறம், குவியப் புள்ளிகள் முதலிய ஒளிப்பட நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுத்தந்தார்.

காட்டுயிர் ஒளிப்படக்கலையில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து பேசிய பராக் பட், "என்னுடைய தந்தை மிகச்சிறந்த ஒளிப்படக்கலைஞர். அவருடன் சேர்ந்து சிறுவயதில் இருந்தே ஒளிப்படங்கள் எடுத்து வந்தேன். 1990 களில் இருந்து, காட்டுயிர் ஒளிப்படக்கலையின் மீதான எனது ஆர்வத்தை வெளிப்படுத்தத் தொடங்கினேன்.


என்னுடைய முதல் பயணம் கென்யாவில் இருந்து தொடங்கியது. அந்த காலங்களில் ஃபிலிம் கேமராக்கள்தான் இருந்தன. இன்று டிஜிட்டல் கேமராக்களில் சுலபமாக கற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், ஃபிலிம் கேமராவில் கற்றுக்கொள்வது மிகவும் கடினம். ஒவ்வொரு முறையும், படத்தை எடுத்து முடித்தவுடன், குறிப்புகள் எழுதிக்கொள்ள வேண்டும்" என்றவர், விலங்குகள் வேட்டையாடப்படுவது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

"இன்றும் பல இடங்களில் காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டாலும், வனத்துறையினரால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. வேட்டையாடுபவர்கள் துப்பாக்கிகளுடன் வருவதால், அவர்களை சமாளிப்பதும் கடினமான ஒன்றாகி விடுகிறது" என்றார்.

அவருடைய ஒளிப்படங்களை திரையில் பார்த்த மாணவர்கள் தங்களை மறந்து, ஒவ்வொரு படத்திற்கும் கைத்தட்டி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



யாருடைய பயிற்சியும் இன்றி, தாமாக இக்கலையை கற்ற பராக் பட், இந்த டிஜிட்டல் யுகத்தில், காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி கண்டிப்பாக சாதிக்க முடியும் என்பதற்கு இளந்தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

-செய்தி மற்றும் படங்கள்: ஜெ. விக்னேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close