Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகையே மாற்றிய அக்டோபர் புரட்சி!

ர் இடதுசாரி கட்சியின் போராட்டக் காட்சியை பார்த்தால், அதன் போராட்டக் கொடியில், பொதுவுடைமை விதையை விதைத்த கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், சே, லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகிய ஐந்து தலைவர்களின் படம் கண்டிப்பாக இடம்பெறும். அக்டோபர் புரட்சி நடந்து 98 ஆண்டுகள் ஆகின்றன.

19-ம் நூற்றாண்டில் அடிமைத்தனத்தை ஆக்கப் பொருளாகக் கொண்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸ்,  ரஷ்யாவை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. சார் மன்னர்களின் கொடுங்கோலாட்சி முடிவுற்று, அக்டோபர் 17, 1917ல் போல்ஸ்விக் புரட்சி என்னும் ரஷ்யப்புரட்சி தோன்றியது.இப்புரட்சியின் விளைவாக அந்நாட்டில் பொதுவுடைமை தத்துவம் மலர்ந்தது.

1917 -ம் ஆண்டில் தோன்றிய அந்த புரட்சி,  பல்வேறு காரணங்களால் எழுந்த ஒன்றாகும். 1894 முதல் 1917 வரை ஆண்ட கடைசி சார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ்,  கொடுங்கோன்மை மிக்கவராயிருந்தார். மக்களின் வறுமை மற்றும் நோய்களைப்பற்றி  கவலைபடாத அவர், ரஷ்புத்தின் என்னும் மதகுருவிற்கு கட்டுப்பட்டவராகவும்,  தன் மனைவியின் சொல் கேட்பவராகவும் விளங்கினார்.

மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களும்  நிலக்கிழார்களால் துன்பத்திற்குட்படுத்தப்பட்டனர். உழைப்பவர்களுக்கு நிலமற்ற நிலையும்,  பொருளாதாரத் தட்டுப்பாடுகளும் காணப்பட்டன. கல்வியறிவின்மையாலும், நவீன விவசாய முறைகள் கைக் கொள்ளப்படாமையாலும் விவசாயிகள் வருந்தினர். 1861ல் இயற்றப்பட்ட அடிமை மீட்சிச் சட்டமும் அவர்களுக்கு யாதொரு முழுப்பயனையும் வழங்கவில்லை. எனவே உரிமை மற்றும் சமத்துவ எண்ணங்களால் உந்தப்பட்ட அவர்கள்,  கிளர்ச்சிகளை மேற்கொள்ளலாயினர்.

கிராமங்களில் வறுமையில் உழன்று கொண்டிருந்த விவசாயிகள்,  நகரங்களுக்கு குடியேற ஆரம்பித்தபோது, பிரச்னைகள் மேலும் சிக்கலடைந்தன. சமுதாய அவலத்தையும் சமுதாய மாற்றத்திற்கான வழிகளையும் சுட்டிக்காட்ட பல எழுத்தாளர்கள் எழுந்தனர். லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, டர்க்னேவ் போன்ற எழுத்தாளர்கள்,  விவசாயிகளின் அவலநிலையை தங்கள் எழுத்துகளால் படம் பிடித்துக் காட்டினர். அத்துடன் மக்கள் மனதில் பழமைக் கருத்துகள் மாறுபட வேண்டியதின் அவசியத்தையும் தோற்றுவித்தனர்.

மார்க்ஸின் மூலதனம் (DAS CAPITAL),  மக்கள் மனத்தில் புரட்சிக் கருத்துகளுக்கு வித்தூன்றின. இதனை ஆதாரமாகக் கொண்டே,  லெனின் பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்க எண்ணினார். அவருடைய நாவன்மையாலும் பேச்சாற்றாலாலும் மக்கள் விழிப்படைந்தனர்.

ரஷ்யா- ஜப்பான் இடையே 1904-ம் ஆண்டில் நடந்த போரின்போதும், முதல் உலகப் போரின் போதும் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட  தோல்வி,  அந்நாட்டின் நிதி நிலைமையையும் மக்களின் வாழ்வையையும் சீர்குலைத்தன. அரசு எவ்விதமான சீரமைப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளாமல்,  மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கின. இதனால் தொழிலாளர்கள் பணியாற்ற மறுத்தனர். போர் வீரர்கள் போரிட மறுத்தனர்.

1914-ல் முதலில் புரட்சியாளர்கள்,  கிரென்ஸ்கி தலைமையில் ஓர் அரசினை தோற்றுவித்தனர். 1917 ஜூலையில் இவர் தலைமையில் ஆட்சி கைப்பற்றப்பட்டது. மத்திய தர வகுப்பினரின் கையில் இருந்த ஆட்சியானது தொழிலாளர்கள், விவசாயிகள் கைகளுக்கு மாற வேண்டுமென இடதுசாரிப் பிரிவினரான சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி விரும்பியது.

தலைமறைவு வாழ்கைக்கு பின் 1917ல் தாயகம் திரும்பிய லெனின்,  சமதர்மக் கோட்பாட்டை நிறுவ கடும் நடவடிக்கைகள் எடுக்கலானார். வலது சாரி பிரிவினராகவும், மிதவாதிகளாகவுமிருந்த மென்ஷ்லிக்குகளை விட லெனின் தலைமையிலான இடதுசாரிகள்,தொழிலாளர்கள், இளைஞர்கள் நிறைந்த போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் செல்வாக்கு லெனின் கைக்கு மாறியது. அன்று முதல் ரஷ்யா, 'சோவியத் குடியரசு' என அறிவிக்கப்பட்டது.

உலகையே மாற்றிய புரட்சி இதுவாகும். இதற்கு விலையாய்  எண்ணற்ற இழப்புகளை சந்திக்க நேரிட்டது.

'உழைக்கும் மனிதர்களின் மைந்தன்' என தன்னை அறிவித்த லெனின், அதை செய்தும் காட்டினர்.

ச.ஸ்ரீராம் இரங்கநாத்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close