Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கணிப்பொறியின் காதலன் பில் கேட்ஸ்: பிறந்த தின சிறப்பு பகிர்வு

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் அக்டோபர் 28,1955-ல் பிறந்தார். இவரது தந்தை  வில்லியம் ஹெச்.கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது தந்தை வழக்கறிஞகராகவும், தாயார் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க இயக்குநர் வாரியத்தில் பணியாற்றினார்.

பில் கேட்ஸ் தனது சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார். அவர் கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். தன் 13-வது வயதில் சியாட்டில் பெயர் பெற்ற லேக்சைட் பள்ளிக்கு அனுப்பபட்டார். ஒரு டெலிப்பிரிண்டர் வகையை சேர்ந்த கணினி, தினசரி சில மணி நேர கணினி பயன்பட்டுக்காக வாங்கபட்டது. மாணவர்களுக்கு கணினி பயிற்றுவிக்க வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை (PROGRAM) டிக்-ட்க்-டே விளையட்டுக்காக எழுதினார். அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டார். அவரது ஆர்வத்தை பார்த்த பள்ளி, அவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது. அதன் மூலம் அவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது.

1973-ல் ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.1974-ம் ஆண்டு இண்டெல் நிறுவனம் புதிய மைக்ரோ ப்ராஸ்ஸசரை (micro processor) அறிமுகம் செய்தது. அதன் ப்ரோக்ராம்மிங் பணிக்கு அந்நிறுவனம் பில் கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் பால் ஆகியோரிடம் உதவியை நாடியது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படித்தி, வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்கள் ப்ரோக்ராம்மை எழுத ஆரம்பித்தனர். அவர்களின்விடா முயற்சியினால் எழுதப்பட்ட ப்ரோக்ராம் பரிசோதித்து பார்க்கப்பட்டது, முயற்சி வெற்றி கண்டது. அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அதன் பின் 1977-ம் ஆண்டு ஆல்புகர்க் நகரின் மிகப் பெரிய அடுக்கு மாடிக்கட்டிடத்தின் எட்டாவது மாடியில் ஒரு சிறிய அறையில்  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் பால் ஆரம்பித்தார்கள். அச்சிறிய கம்பெனி வளர ஆரம்பித்தது.தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களது திறமைக்கு ஏற்றவாறு பதவி உயர்வு,சம்பள உயர்வு  வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

1981-ம் ஆண்டில் IBM கணினிகளுக்கான  MS DOS என்ற OPERATING SYSTEM அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார். அதன் சிறப்பை எடுத்துக் கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார். 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின. ஒவ்வொரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் மைக்ரோசாப்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனது.

அதன் பின் 1990களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம்.இணையத்தில் உலா வர உதவும் "நெட்கேப்ஸ்" என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார். ஆனால் அதை விற்கவோ, மைக்ரோசாஃப்டோடு இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்தினார் பில்கேட்ஸ்.

நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் செயலியை உருவாக்கி அதனை புதிய கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார். அதனால், விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் ஆதிக்கம் மங்கத் தொடங்கியது.

மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994-ல் பில்கேட்ஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பில்கேட்ஸும், அவரது மனைவியும் இணைந்து அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.

விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துதான்  விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 8.1 ,10 இயங்குதளம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

உலகில் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 12 ஆண்டுகளாக பெற்று வந்தவர் இவர்தான். கணினி உலகத்தையே தன் வசப்படுத்திக் கொண்ட பில் கேட்ஸ்சின் பிறந்த தினம் இன்று.

இலக்கியா ரவிச்சந்திரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close