Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளி நமக்குமட்டுமல்ல; பிராணிகளுக்கும்தான்!

தீபாவளியின் 3 நாள் கொண்டாட்டங்களுக்கு பிறகு செல்லப்பிராணிகள் மட்டுமின்றி, நம் சுற்றுப்புறங்களில் புழங்கும் பிராணிகளும் பெரும் அவஸ்தையை அனுபவிக்கின்றன. இந்த கொண்டாட்ட நாட்களுக்குப்பின் அவை தங்கள் முந்தைய உற்சாக வாழ்க்கையை முற்றாக தொலைத்து விட்டு வாழ நேரிடுகிறது என அதிர்ச்சி தருகிறார் அரசு  கால்நடை மருத்துவர் வி.பி.சுதாகர்.

பட்டாசு வெடிப்பது என்பது தங்களின் அந்தஸ்தை காட்டும் ஒரு சடங்காகவும் மாறிவிட்டிருக்கிறது சமீப காலங்களில்.  3 நாள் கொண்டாட்டத்திற்கு அவர்கள் கொடுக்கும் விலை தங்கள் வீட்டுப்பிராணிகளின் ஆரோக்கியம். 

இயல்பான ஒரு மனிதன் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வலைகளை உணர முடியும். இதனால் நமக்கு இயல்பாக 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான சிறு ஒலியையும்,  20 000 ஹெர்ட்ஸ்க்கு அதிகமாக பெரும் ஒலியையும் கேட்க முடியாது.

அதனால் பட்டாசு மற்றும் பெரிய வெடிச்சத்தங்கள் நமக்கு பெரிதும் அதிர்வுகளை தருவதில்லை. ஆனால் பிராணிகள் மனிதர்களை விட மிக துல்லியமான ஒலியை கேட்கும் திறனுடையவை. அவை 40,000 ஹெர்ட்ஸ் முதல் 1,00,000 வரையிலான அதிர்வலைகளை உணரமுடியும். 1000 ஹெர்ட்ஸ் என்பது 1 கிலோ ஹெர்ட்ஸ்க்கு சமம்.

அதாவது மிக நுண்ணிய குறைந்த ஒலியையும் அதேசமயம் 1 லட்சம் ஹெர்ட்ஸ் வரையிலான அதிகபட்ச ஒலியையும் உணரும் தன்மை கொண்டவை. இது ஒவ்வொரு விலங்குகளுக்கு தக்கபடி கூடுதலாகவும் சற்று குறைவாகவும் உள்ளன. அதாவது மனிதர்களைவிட பிராணிகளுக்கு  20 மடங்கு உணர்வு திறனும் நுணுக்கமான கேட்பு திறனும் அதிகம்.  அதனால்தான் சுனாமி போன்ற பேரழிவுகளை மற்றும் வானிலை சமிக்சைகளை  விலங்குகள் முன்கூட்டியே அறிய முடிகிறது. சிறப்பான இந்த திறன்தான் தீபாவளியின்போது அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது.

வழக்கத்துக்கு மாறான அதிர்வுடன், அதிக சத்தத்துடனனும் பட்டாசுகள் வெடிக்கும் போது செல்லப்பிராணிகள் பயந்து நடுங்குகின்றன. சத்தத்துக்கு அஞ்சி அங்கும் இங்கும் ஓடி நிலை கொள்ளாமல் மிரண்டு ஓடுகின்றன. கொண்டாட்டமான அந்த நேரத்தில் அவைகளின் உணர்வுகள் எஜமானர்களால் புறந்தள்ளப்படுகின்றன. தீபாவளி முடிந்த பின்னர்தான் தங்கள் செல்லப்பிராணிகளின் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளை மனிதர்கள் கண்டுகொள்ளுகின்றனர்.

பாசமாக இருந்தவர்களை கண்டால் கூட அஞ்சு ஓடுவது, உணவை மறுப்பது, எப்போதும் மிரட்சியான முகபாவத்தை வெளிப்படுத்துவது என அடுத்த சில நாட்கள், பிராணிகள்  தீபாவளி பாதிப்புகளால் வதைபடுகின்றன. தீபாவளி முடிந்தபின் அடுத்த சில நாட்களுக்கு கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான செல்லப்பிராணிகள் கொண்டுவரப்படுகின்றன.

பெரும்பாலான பிராணிகள் காது கேளாமை, தூக்கமின்மை, பயம், உணவு உண்ணாமை, இதய கோளாறு, இரத்த கொதிப்பு சுவாச கோளாறு, கீழ்படியாமை, தசைபிடிப்பு, நரம்பு தளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்படுகிறது. முதற்கட்டமாக மருத்துவர்களால் பயத்தை போக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டு படிப்படியாக அவற்றின் பாதிப்புகள் சரிசெய்யப்படுகின்றன. ஆயினும் இந்த அதிர்ச்சிகளிலிருந்து  அவை மீள பல நாட்கள் ஆகின்றன.

செல்லப்பிராணிகள் நிலை இதுவென்றால், தெரு நாய்களின் நிலைமை இன்னும் மோசம். பெரும்பாலான நாய்கள் தீபாவளி முடிந்தபின்னரும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை பயத்தினால் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் சென்று உணவின்றி தங்களை மறைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றது. சில பிராணிகள் அதிக சப்தம் காரணமாக வழி தெரியாமல் தறிகெட்டு தெருக்களில் ஓடி வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன.

எனவே, தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். ஆனால், நம்மை சார்ந்து வாழும் நாய், பூனை, பசு, எருமை மற்றும் பறவைகள் என பிற வாயில்லா உயிரினங்களின் பாதுகாப்பிற்கு வழிவிட்டு கொண்டாடுவோம். அவைகளுக்கு அச்சத்தை தரும் வகையில் பட்டாசுகள் வெடிக்காமல் வெட்ட வெளியிலோ திடல்களிலோ பட்டாசுகள் வெடித்து கொண்டாடுங்கள். முடிந்தவரை அதிக சத்தம் எழுப்பாத பட்டாசுகளை தேர்ந்தெடுங்கள்.

பட்டாசு வெடிக்கும் சமயங்களில் செல்லப்பிராணிகளை எப்படி பாதுகாக்கலாம் என அவரிடம் கேட்டோம்.

“ பட்டாசு வெடிக்கும் நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு அதிக சப்தம் இல்லாத அறைகளில் இடம் தரலாம். அப்படி இல்லையெனில் அதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்ய அனுமதி தரலாம். அவைகளுக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகள் கொடுத்து அதன் கவனத்தை மாற்றி அமைக்கலாம்.

முன்கூட்டியே கால்நடை மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று பயம் குறையக் கூடிய மருந்துகளை தரலாம். பொதுமக்களாகிய நாமும் நாய்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்து சப்தம் இல்லாத பட்டாசுகளை பயன்படுத்தினால் நம்முடன் செல்லப்பிராணிகளும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவார்கள். வருங்காலங்களில் தீபாவளி பிராணிகளுக்குமானதாக மாறட்டும்" என்றார்.

- எஸ்.கிருபாகரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close