Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்படியும் ஒரு தீபாவளி!

ப்படியும் தீபாவளி கொண்டாடலாம் என மனம் நெகிழும் நிகழ்வை அரங்கேற்றியிருக்கிறார்கள் 'படிக்கட்டுகள்' என்ற இளைஞர்கள் அமைப்பினர். மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த இந்த விழாவின் சிறப்பு, HIV யால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டத்தை அரங்கேற்றியது. 

தங்கள் அமைப்பு மூலம் பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பொருளாகவும், பணமாகவும் பெற்று, HIV வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவு இன்றி தவிக்கும் HIV வைரஸ் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் விதமாக, அவர்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் , பட்டாசுகளும் வழங்கி கொண்டாடினர்.

மனதில் ஆயிரம் கவலைகளுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் அந்த குழந்தைகள், தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

உதவி செய்ததோடு, குழந்தைகள் கொண்டாட்டத்தை தாங்களும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று உற்சாகத்துடன் கலந்துகொண்டனர் உதவிக்கரம் நீட்டிய சில நல் உள்ளங்கள். மாறுவேடப்போட்டி, நடனம், பாட்டு, பட்டாசு வெடித்தல் என உற்சாகத்துடன் பங்கேற்றனர் குழந்தைகள்.

விழாவில் பங்கேற்ற குழந்தை, “ அங்கிள் எங்களுக்கு இங்க வந்தது ரொம்ப ஜாலியா இருந்துச்சு. வீட்டுல தீபாவளி கொண்டாடுனா தனியா இருக்க மாதிரி தோணும். இங்க நிறைய பேர்கூட கொண்டாடினது புதுசா இருந்துச்சு. எங்க எல்லாருக்கும் புது டிரெஸ் கொடுத்துருக்காங்க. அழகா இருக்கு. இதை பத்திரமா வச்சிக்குவோம். எல்லா அண்ணன்களுக்கும் தேங்க்ஸ் சொன்னோம்“ என்றாள் மழலைக்குரலில்.

குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த படிக்கட்டு அமைப்பைச் சேர்ந்த கிஷோரிடம் பேசினோம்.

" தீபாவளியை மனம் நிறைய மகிழ்ச்சியோடு கொண்டாடுவது குழந்தைகள்தான். இளைஞர்களால் உருவாக்கப்பட்ட எங்கள் அமைப்பு பல சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு அங்கம்தான், HIV பாதித்த குழந்தைகளை சந்தோஷம் கொள்ளச்செய்த இந்த தீபாவளி. எத்தனை சேவைகள் செய்தாலும் கடவுளின் குழந்தைகளான இவர்களுடன் தீபாவளியை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நிகழ்வினால் எங்கள் படிக்கட்டு அமைப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்களை விட ஆதரவற்ற அந்த குழந்தைகளுக்கு அன்றொரு நாள் சந்தோஷத்தை கொடுத்த மனதிருப்தியைத்தான் பெரிதாக எண்ணுகிறோம்.

மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை, அமைப்புகள் மட்டுமின்றி தனிப்பட்ட நபர்களும் தங்கள் கொண்டாட்ட நாட்களை ஆதரவற்ற குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டால், சமூகத்தில் ஆதரவற்றவர்கள் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். அந்த வகையில் படிக்கட்டு நடத்திய இந்த நிகழ்வு ஆதரவற்ற மக்களுக்கு நாம் தூண்டுகோலாக அமையும். முடிந்த வரை இல்லாமையை இல்லாது ஆக்குவோம்” என்றார் .

- சே.சின்னத்துரை
படம்;
நா.ராஜ முருகன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ