Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உருகிய ரஜினி! மலேசியாவில் நடந்த நெகிழ்ச்சியான கதை

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தயராகி வரும்  கபாலி திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக மலேசியா முழுவதும் தினம் தினம் தீபாவளி என்று சொல்லக்கூடிய அளவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ரஜினிகாந்த் தன் மலேசிய ரசிகர்களைச்  சந்திப்பது அவர்களுடன் உரையாடுவது என தனக்கே உரிய ஸ்டைலில் அந்த நாட்டையே அதகளம் செய்துகொண்டிருக்கிறார்.

ஏர்போர்ட்டில் சாதாரணமாக நிற்பது, தன் உருவத்தைப் பச்சைக் குத்திக்கொண்ட  தீவிர ரசிகருடன் செல்பி கிளிக்குவது என ஒவ்வொரு நாளும் டிரெண்டிங்கிலேயே இருக்கிறார். அப்படிப்பட்ட வைரல்களில் சமீபத்திய டாப் வைரல்தான் இந்த உருக்கமான கதை.

ரஜினியின் தீவிர ரசிகையான ஆக்னஸ்  என்பவரின் கடைசி ஆசைதான் அந்த வைரலுக்கு காரணம். இதய நோயால் பாதிக்கப்பட்டு மலேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஆக்னஸ். ரஜினியின் தீவிர ரசிகையான இவருடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டதற்கு "எப்படியாவது நான் தலைவர நேர்ல பார்த்துடனும்" என்றிருக்கிறார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ரஜினிகாந்த இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடன் எல்லா வேலைகளுக்கும் மத்தியில் ஆக்னஸை சந்திக்க அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவமனைக்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டாராம். இந்த நெகிழ்வான தருணத்தில் ஆக்னஸுடன் புகைப்படம் எடுத்து ஆறுதல் வார்த்தைகள் கூறி நலம் பெற வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

லோ.சியாம் சுந்தர் 
மாணவப் பத்திரிக்கையாளர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close