Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளுக்கான முதல் ஸ்மார்ட்பாேன் அறிமுகம்!

ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அட்டகாசமாக களம் இறங்கியிருக்கிறது ஸ்வைப் டெலிகாம் நிறுவனம்.

வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்களை தவிர்த்து,  சந்தையில் அனைவரும் வியக்கும் வகையில் குழந்தைகள் மட்டும்  பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அந்த ஸ்மார்ட்பாேன் பற்றிய தகவல்கள்...

* ஸ்வைப் நிறுவனம் ஜூனியர் எனும் புதிய மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது.

* குழந்தைகள் மட்டும் பயன்படுத்தும் அளவுக்கு இந்த கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது தனி சிறப்பு.

* சுமார் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மட்டும் இந்த கருவியை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருப்பதோடு, விரைவில் ஆன்லைன் மூலம் விற்பனை துவங்கும் என்றும் அறிவித்துள்ளது.

* குழந்தைகளை கவரும் யூஸர் இன்டர்ஃபேஸ், ஜியோ டிராக்கிங், ஜியோ ஃபென்சிங் என குழந்தைகளின் நடவடிக்கைகளை ட்ராக் செய்யும் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

* மேலும் ஆப் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலம் செயலிகளை ப்ளாக் மற்றும் அனுமதிக்கும் ஆப்ஷன்கள் இந்த கருவியில் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

* ஸ்வைப் ஜூனியர் கருவியில் 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 Ghz டூயல் கோர் பிராசஸர் (dual-core processor) வழங்கப்பட்டுள்ளது.
 

*இதோடு 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரியும், ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் இயங்குதளம் மற்றும் 3ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

* 2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு 1900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

* தற்சமயம் இந்த கருவியின் விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* ஸ்னாப்டீல், அமேசான், பேடிஎம் போன்ற ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் ரூ.5999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

-மு.ஜெயராஜ் (மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ