Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

களங்களின் டைம்லைன்!: பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறிய நாள்

1916 ல் தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோரின் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு, காங்கிரசின் செல்வாக்கு குறையத்தொடங்கியது. 1920 வரை மாகாண காங்கிரஸ் அமைப்புகளோ, அகில இந்திய அளவிலான காங்கிரசின் தலைமையோ முறைப்படுத்தப்படவில்லை.

1920-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மொழி அடிப்படையிலான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 1920 முதல் காங்கிரஸ் அமைப்பில் பெரியார், திரு.வி.க., ராஜாஜி, ஜீவா போன்ற பலர் தீவிரமாக இயங்கினர். 1921 முதல் மொழிவாரி மாகாணங்களின் ஒருங்கிணைந்த அமைப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மாற்றம் பெற்றது. அப்போதைய சென்னை மாகாணத்திற்கான காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களாக ராஜாஜி மற்றும் தந்தை பெரியார் பொறுப்பேற்றனர்.

 

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்த தீண்டாமை ஒழிப்பு மற்றும் மது ஒழிப்பு கொள்கைகள் தந்தை பெரியாரை மிகவும் கவர அவற்றில் மிகத் தீவிரமாக இறங்கினார். உபதேசம் ஊருக்கு மட்டும் என்பது போல் இருக்காமல் தன் சொந்த தென்னந்தோப்பில் இருந்த‌ ஐநூறு மரங்களை வெட்டி வீழ்த்தினார். மேலும் தன் குடும்ப பெண்களையே மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கு பெறச் செய்தார்.

ஒத்துழையாமை கொள்கையைப் பற்றி ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மது ஒழிப்பு போராட்டம் மட்டும் ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களின் கையில்தான் உள்ளது என்று கூறும் அளவிற்கு இருந்தது அவரது அவரது தீவிரம். ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக எல்லாரையும் அரசு அலுவலகங்களை புறக்கணிக்கும் படி காந்தி கூறியிருந்தார். அந்த சமயத்தில் நீதிமன்றத்தின் மூலம் அவர் கொடுத்திருந்த‌ கடன் ரூ. 28,000 அவருக்கு திரும்ப வர வேண்டி இருந்தது. ஆனால் பெரியார் அந்த பணமே வேண்டாம் என்று இருந்தார். அவருக்காக வாதாடி தான் அந்த பணத்தை பற்று தருவதாக சேலம் விஜயராகவாச்சாரியார் முன் வந்த போதும், 'எனக்காக நான் பெற்றாலும் நீங்கள் பெற்றாலும் அது ஒன்று தான் ' என்று மறுத்துவிட்டார். அதனை கட்சி நிதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறியும்,   கொண்ட கொள்கையிலிருந்து விலக முடியாது என்று கூறி கட்டாயமாக அதனை மறுத்துவிட்டார் .

ஒத்துழையாமை இயக்கத்தின் காரணாமாகவே யாரும் காங்கிரசில் இருந்து தேர்தலில் போட்டியிட இடக்கூடாது என்று பெரியார் கூறினார். ஆனால் மோதிலால் நேரு போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினர். காங்கிரசின் உள் வாக்கெடுப்பில், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தரப்பினர் தோற்றனர். பின் மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாசுடன் இணைந்து 1923 -ல் சுய ராஜியக் கட்சி என்ற கிளை கட்சி போன்றதொரு கட்சியை உருவாக்கினார்.

பெரியார் சுயராஜ்யக் கட்சியை கடுமையாக விமர்சிக்க, பிற சுயராஜ்ய கட்சி எதிர்ப்பாளர்கள் பெரியாருடன் இணைந்து சுய ராஜ்யக் கட்சியை ஆதரிப்பவர்கள்  காங்கிரசிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறினர் சிலர். தந்தை பெரியார் தொடர்ந்து சுய ராஜ்யக் கட்சியை அம்பலப்படுத்தினார். சட்ட சபைக்குள் நுழைவதும், சொந்தக்காரர்களுக்கு அரசு பதவி வாங்கி தருவதுதான் சுய ராஜ்யமா என்று கேள்வி எழுப்பினார். பெரியாரை காங்கிரசில் கொண்டு வந்து சேர்த்த ராஜாஜியே ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராக திரும்பினார். இப்படி தொடர்ந்து தன் கொள்கையில் விடாப்பிடியாக நின்றவர் தந்தை பெரியார்.

காங்கிரசில் இருந்து கொண்டே,  பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியார் கொண்டு வந்த பல முயற்சிகள்,  காங்கிரசில் அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்த பார்ப்பனர்களால் தடுக்கப்பட்டது. 1920 முதல் 1924 வரை பார்ப்பனர் அல்லாதோரும் படித்து நல்ல நிலையில் இருப்பதற்கான முன்னோடியான வகுப்பு வாரி  உரிமை தீர்மானத்தை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்ற முயற்சி செய்து, அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைய, 1925 -ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் கொண்டு வரப்பட்டது.

திரு.வி.க தான் மாநாட்டின் தலைவர் என்று நம்பி தீர்மானத்தை கொண்டு வந்தார் பெரியார். ஆனால், அந்த தீர்மானமானது பொது நன்மைக்கு எதிரானது என்று கூறி, திரு.வி.க. தீர்மானத்தை நிராகரிக்க, அந்த மாநாட்டிலேயே தான் காங்கிரசில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் பெரியார். இவ்வாறு தான் கொண்ட கொள்கையை துண்டு போல் கருதாமல், உயிர் மூச்சாய் கருதி, காலம் எல்லாம் அதில் இருந்து சிறிதும் வழுவாமல் இருந்தவர் தந்தை பெரியார்.

- ரமணி.எம்

மாணவர் பத்திரிகையாளர்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close