Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனை கௌரவிக்கும் கூகுள்!

சென்னை: பால் உற்பத்தியில் உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை உருவாக்கிய வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியனுக்கு இன்று 94-வது பிறந்த நாள். இதனை கவுரவிக்கும் விதமாக, மாட்டுடன் பால் கேன் வைத்துக் கொண்டிருக்கும் வர்கீஸ் குரியனின் படத்தை கூகுள் தனது டூடுலாக வைத்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த வர்கீஸ் குரியன், இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் பால்காரர் என்றும் இவர் அழைக்கப்படுவதுண்டு. 1921-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, கேரளாவில் பிறந்த வர்கீஸ் குரியன், சென்னை லயோலாக் கல்லூரியில் 1940-ம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். 1946-ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து, அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்தில் படித்து,  இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்புநிலையில் பெற்றார்.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் தலைவராக வர்கீஸ் இருந்துள்ளார். முதலில் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை மேம்படுத்திய அவர், கூட்டுறவு அமைப்பு மூலம், அமுல் (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்) என்ற வணிகப்பெயருடன், பால் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாகவும் வெற்றிபெற வைத்தார் வர்கீஸ் குரியன்.

மேலும், கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன், இந்தியாவின் வெண்மை புரட்சியை வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார். 2012-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தனது 90வது வயதில் மறைந்த வர்கீஸ் குரியனுக்கு,  பத்ம விருதுகள் உட்பட பல்வேறு உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close