Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று உலக எய்ட்ஸ் தினம்: உயிரியல் போர் ஆயுதம் உருவானது எப்படி?

'எய்ட்ஸ் நோய், கடவுள் ஆப்பிரிக்கர்களுக்குக் கொடுத்த சாபம் என்கிறார்கள். நான் அப்படிக் கருதவில்லை. மனிதனால் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டதே ஹெச்.ஐ.வி கிருமி. இதன் விளைவு என்னவென்றால், இனி துப்பாக்கிகள் எல்லாம் கற்காலத்திற்கு மட்டுமே. மனித இனத்தை அழிக்க இந்த உயிரியல் போர் ஆயுதம் ஒன்றே போதும்...' -உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய்க்கான மூலத்தை விதைத்தவர் யார்? என்பது பற்றி எந்தவித தயக்கமும் இல்லாமல் முன்வைத்தவர் வங்காரி மத்தாய். கென்ய நாட்டின் சுற்றுச்சூழல் போராளி. இவர் வைரஸ் (virology) குறித்துப் படித்தவர். 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவர்.

இன்று உலக எய்ட்ஸ் தினம். 'புதிய எச்.ஐ.வி நோய் தோற்று இல்லாத, புறக்கணிப்பு இல்லாத மற்றும் எய்ட்ஸ் நோயின் மூலம் உயிர் பலியில்லாத நிலையை உருவாக்குதல்' என்பதுதான் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முன்வைக்கப்படும் மையக் கருத்து. ஒவ்வொரு ஆண்டும் போப்பாண்டவர் முதற்கொண்டு, ஆளும் அரசுகள் உலக எய்ட்ஸ் தினத்திற்கு எதாவது ஒரு செய்தியைச் சொல்வது சடங்காகவே மாறிவிட்டது. எய்ட்ஸ் நோயாளிகளின் மீதான அரசின் பரிவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. 1981-ம் ஆண்டில் இருந்து இதுவரை இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் எய்ட்ஸ் நோயால் இறந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் 3 கோடியே 32 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள். 2007-ம் ஆண்டில் 20 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் இறந்தார்கள். இதில் குழந்தைகள் மட்டும் 2,70,000 பேர் என்கிறது ஒரு புள்ளி விபரக் குறிப்பு...

எய்ட்ஸ் நோய் யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதைப் பற்றி விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நோபல் பரிசு பெற்ற வங்காரி மத்தாய், 'அமெரிக்க ராணுவ உயிரியல் போர்முறை வளாகத்தில் (Fort Detrick) உருவாக்கப்பட்ட கிருமிதான் எச்.ஐ.வி வைரஸ் எனப்படும் எய்ட்ஸ்' என அறிவித்தபோது, உலமே அதிர்ந்தது.

கென்யாவில் ஏராளமான எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். 2006-ம் வருட கணக்குப்படி உலகில் மொத்தம் 38 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். இதில் முதல் இடத்தில் ஆப்பிரிக்காவும் (28.1 மில்லியன் மக்கள்) மூன்றாம் இடத்தில் இந்தியாவும் (3.97 மில்லியன் மக்கள்) இருக்கிறது. இது எப்படி பரவியது? இத்தனை மில்லியன் மக்கள் கொடுமையான மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்களே?

1969-ல் கலிபோர்னியாவின் 'டேவிட்' என்னும் இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் குரங்குகளுக்கு 'எய்ட்ஸ் கிருமிகள்' ஊசி மூலம் செலுத்தப்பட்டு ஆய்வு செய்திருக்கிறது அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம். எய்ட்ஸ் கிருமிகள் செலுத்தப்பட்ட குரங்கள் ஒரே வருடத்தில் இறந்திருக்கின்றன. 1970-ல் பூனைகளுக்கு 'எயிட்ஸ் கிருமி' செலுத்தப்பட்டு, அவைகளும் இறந்தன. 1974-ல் சிம்பன்சி குரங்குகளுக்கு 'எயிட்ஸ் கிருமிகள்' செலுத்தப்பட்டு அவைகளும் இறந்தன.

குரங்கு, பூனை, சிம்பன்சி குரங்கு என மிருகங்களுக்கு 'எயிட்ஸ் கிருமிகள்' செலுத்தப்பட்டு சோதனை செய்த அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம், 1979-ல் பென்டகன் ஆய்வு மையத்தின் நுண்ணுயிர் ஆய்வாளரான டாக்டர் மேக் ஆர்தூர் ஆலோசனைப்படி சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட HIV (Human Immuno Deficiency Virus) அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தடுப்பூசி மூலம் பரப்பப்பட்டது. 'எய்ட்ஸ்' உருவாக ஹெச்.ஐ.வி (HIV)யும், அவை உருவான இடமான அமெரிக்காவின் 'மான்ஹாட்டன்' (Manhatten) பகுதி தான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்தது.

1982-க்கு பிறகே எய்ட்ஸ் ஆப்பிரிக்காவில் வந்தது. அது எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை 1987 மே மாதம் 11-ம் தேதியில் வெளியான லண்டன் டைம்ஸ் விவரிக்கிறது: 'உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் பல மில்லியன் மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி ஆப்பிரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக, ஆப்பிரிக்க மக்களிடம் எய்ட்ஸ் பரவியது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட உயிர்கள் அழித்தொழிப்பு கொடுமை' என அந்த அறிக்கை நீண்டுகொண்டே போகிறது. இதுதவிர, எய்ட்ஸ் நோயின் மூலம் குறித்து ஆய்வில் ஈடுபட்டோரின் கதி என்னவானது என்பதையும் ஓர் அதிர்ச்சி புள்ளிவிபரம் அம்பலப்படுத்துகிறது.

ஜேக்கப் சிகால். கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர். லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு 26.10.1986-ல் பேட்டி எடுத்தபோது ஒரு விஷயத்தை முன்வைத்தார். 'எய்ட்ஸ் கிருமி மனிதனின் செய்கையால் உருவாக்கப்பட்டது. இதை மறுக்கவும், மறைக்கவும் அமெரிக்கா முயற்சி செய்கிறது' என்றும், எய்ட்ஸ் கிருமி குறித்த நீண்ட விளக்கத்தையும் அப்பேட்டியில் கூறி இருந்தார். அதற்கு பின் ஜேக்கப் சிகால் என்னவானார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவரது பேட்டியையும் மக்கள் சாதாரணமாக நினைத்து விட்டனர்.

டெட் ஸ்டெரக்கர் என்னும் பெயருடைய அமெரிக்க நுண்ணுயிர் கிருமி ஆராய்ச்சியாளர் எய்ட்ஸ் கிருமியின் மூலம் (Origin) குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகள் குறித்து அவருக்குள் பல புதிர்களை உருவாக்கியது. அவைக் குறித்து சில இடங்களில் பேசியும் இருக்கிறார். அதற்கு பின் மிசோரியில் ´'ஸ்பிரிங்க் ஃபில்ட்' என்ற இடத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். சில வாரங்கள் மட்டுமே 'டெட் ஸ்டெரக்கர்' கொலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டதே தவிர, என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலைக்குறித்து ஏதோ உப்புசப்பற்ற விசாரணையை பேருக்கு நடத்தி ஓரங்கட்டி விட்டது அரசு.

lllnosis senate உறுப்பினரான 'ஹவ்ப்' (Huff) என்பவர், எயிட்ஸ் உருவாக்கப்பட்ட கிருமி என்று தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் வந்தது நேரம். எங்கேயோ ஓர் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் உயிர் போவதற்கு முன்பு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தடயங்கள் இருந்தன.

அப்போதும் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும், எய்ட்ஸ் நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு மத்தியில் இக்கொலைகள் பயத்தை ஏற்படுத்தி இருந்தது. 'ஏதோ நம்மை வைத்து ஆட்டையை ஆரம்பித்திருக்கிறது அரசு' என்பதை உணர்ந்து மௌனிகளாக இருந்தனர். பத்திரிகை பேட்டி என்றாலோ, எய்ட்ஸ் கிருமி குறித்த கேள்விகளை யாராவது எழுப்பினாலோ 'ஆளை விடுங்க சாமிகளா...' என்று ஓட்டமெடுத்தனர்.

இந்நிலையில், டாக்டர் லியோநார்டு, 1996-ல் 'Aide Ebola Nature, Accident or intentional' என்ற புத்தகத்தில் ஆதாரங்களுடன் பல விளக்கங்களையும் எழுதி இருக்கிறார் லியோநார்டு. 'எய்ட்ஸ் கிருமிகளின் உருவாக்கம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களாலும், ஆப்பிரிக்க மக்களாளுமே உருவானது என்று அமெரிக்கா சொல்வது நூற்றுக்கு நூறு பொய்!' என்று அடித்துப் பேசுகிறார் லியோநார்டு.

1970-ம் ஆண்டிலேயே எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமெரிக்க அரசு முயற்சித்துள்ளது. இருப்பினும், 1984-ம் ஆண்டுகளில் அவை உண்மையான செய்தி என்று அதிகாரப்பூர்வமாக தெரிய ஆரம்பித்தது. 'எய்ட்ஸ் கிருமியை உருவாக்கத்தின் முக்கிய மூளையாக இருந்தவர் ஹென்றி கிஸ்சிங்கர் என்பவர் (முன்னாள் Secretary of State). அமெரிக்க அரசு இத்திட்டத்திற்காக 1 மில்லியன் டாலர்களை அமெரிக்க ராணுவத்திற்குக் கொடுத்திருக்கிறது. இத்திட்டத்திற்கு M.K. என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 'ஹென்றி கிஸ்சிங்கர்'க்கும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கும், உதவியாக M.David Manakar, K.Paul Kotin என இருவர் இருந்தனர். சி.ஐ.ஏ (C.I.A) துணையுடன் இவர்கள் செயல்பட்டார்கள்' என்றும் லியோநார்டு அந்நூலில் மிகத் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறார். அதன்பிறகு சில மிரட்டல்களை சந்தித்திருக்கிறார் லியோநார்டு.

இன்று வரையில், எய்ட்ஸ் நோயின் மூலம் எங்கே? என்ற கேள்விகளுக்கெல்லாம் லியோநார்டு கொடுத்த விளக்கங்கள் அதிர வைப்பவை. இதுபற்றியெல்லாம் இதுநாள் வரை அமெரிக்க அரசு எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. 'இனி துப்பாக்கிகள் எல்லாம் கற்காலத்திற்கு மட்டும்தான்' என்கின்ற வங்காரி மத்தாயின் கருத்துக்களை மவுனமாக அசைபோடுவதைத் தவிர வேறு வழியும் இல்லை. வைரஸைக் கண்டுபிடிப்பவன்தான் ஆண்டி வைரஸையும் கண்டுபிடிப்பான் என்ற உலக நியதிப்படி, ஒருநாள் அமெரிக்காவே எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை வெளியிட்டாலும் ஆச்சரியம் இல்லை.

ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ