Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் எந்த கடையில் சாப்பிடலாம்? ஆறு பேர் தயாரித்த 'ஃபைண்ட் எ கடை' ஆப்!

சென்னை என்றாலே நமக்கு தெரியும் , அதிக அளவில் மக்கள் வசிப்பதும், அவர்களுக்கு உகந்த வேலையும் கொண்ட நகரம் என்று.

சென்னைக்கு பிரபலமான பல அடையாளங்கள் உண்டு. அதன் முக்கிய அடையாளமாக சுவைமிக்க சாலையோர உணவகங்களையே சொல்லலாம். சென்னை போன்ற பெருநகரத்தில் அதிகப்படியான சாலைகளும்,  அதன் ஓரங்களில்  அதிக அளவிலான உணவகங்களும் உள்ளதால்,  பரபரப்பான நேரத்தில், எந்த சாலையில், எந்த கடையில், சுவையான சமோசா கிடைக்கும்? டேஸ்ட்டான டீ, காபி கிடைக்கும்? எங்கே சுடச் சுட ருசியான புதினா சட்னியுடன் ஆம்லெட் கிடைக்கும்?  என்று தேடிக்கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்!

இப்படி தேடி அலைபவர்களின் தேவையை மனதில் கொண்டு சுவையான, தரமான உணவகங்களை கண்டுபிடிக்க 'ஃபைண்ட் எ கடை' என்ற செயலியை  ஆறு பேர் கொண்ட குழு கண்டுபிடித்துள்ளது. இந்த செயலி 'ஆப்ஸ் பார்  சென்னை ' போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.

உருவாக்கப்பட்ட விதம்

 ரஜோஷி, கார்த்திக், வால்டர், சரத்குமார், தன்மய் கோபால், ஹர்ஷித் ஆகிய ஆறு பேரும் சேர்ந்துதான் 'ஃபைண்ட் எ கடை' செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். '34 கிராஸ்' என்னும் செயலிகளை வடிவமைக்கும் நிறுவனத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாக பணியாற்றுகின்றனர். ரஜோஷியும், தன்மய் கோபாலும் இனைந்து இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கின்றனர்.

"நாங்கள் நைட் ஷிப்ட்  வேலை செய்யும் போது பெரும்பாலும் சாலையோர கடைகளில்தான் சாப்பிடுவோம். ஒருநாள் ஆழ்வார்பேட்டையில் தள்ளுவண்டி கடையில், சுடச் சுட புதினா சட்னி தடவிய சுவையான ஆம்லெட்டை சாப்பிட்டோம். அந்த தள்ளுவண்டிகார்ர் தினமும்  அங்கே நைட் மட்டும் கடை போடுவதை கவனித்தோம். குறைந்தது 20 பேர் கொண்ட கூட்டம் தள்ளுவண்டியை சுற்றி நள்ளிரவிலும் இருந்தது. அப்போதுதான் நிறைய பேருக்கு, இந்த குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும் ருசியான உணவு வழங்கும் சாலையோர கடைகளைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பிறகு 'ஃபைண்ட் எ கடை '  உருவாக்கும் எண்ணம்  எங்களுக்கு வந்தது" என்று கூறினார் ரஜோஷி.

பயன்படுத்தும் விதம்

ஆன்ட்ராய்டு  மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளேஸ்டோரில் இச்செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இது 'கிரவுட் சோர்ஸ்டு ' என்பதால் இதில் சுவையான ,தரமான சாலையோரக் கடைகளைப் பற்றிய தகவல்களை யார் வேண்டுமானாலும் இணைக்கலாம்.


https://play.google.com/store/apps/details?id=in.findakadai.streetfood

"பொதுவாக சாலையோர உணவகங்கள் என்றாலே அங்கே சாப்பிடும் உணவு சுகாதாரமாக இருக்காது என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.அந்த எண்ணத்தை போக்குவதற்கு ,இந்த செயலியில் இணக்க்கப்படும் சாலையோர கடைகளுக்கு  "சுகாதாரத்தை" முக்கிய காரணியாக வைத்து  வடிவமைத்திருக்கிறோம். ஒரு சாலையோர உணவகத்தை இதில் இணைப்பதற்கு  முன் அங்கு சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறதா, குப்பை தொட்டி இருக்கிறதா மற்றும் கடைகாரின் செயல் சுத்தமாக உருக்கிறதா? போன்ற விஷயங்களை சரி பார்த்த பிறகுதான் இணைக்கிறோம்" என்று கூறினார் ரஜோஷி.


"இதுவரைக்கும் நூற்றுக்கணக்கான உணவகங்களை அதன் படங்களுடன் இந்த செயலியில் சேர்த்திருக்கிறார்கள். பெரும்பாலான சாலையோர கடைகளுக்கு பெயர்கள் இருக்காது என்பதற்காக அந்த சாலைகளை படம் எடுத்து அப்லோட் செய்தால் அங்கே இருக்கும் கடைகளை அறிந்து கொள்ளும்படி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 200 ரூபாய் வரை சாப்பிடுவதற்கு செலவாக கூடிய  சாலையோர உணவகங்கள் மட்டுமே இந்த செயலியில் சேர்க்கப்படுகின்றன. பழச்சாறு கடை, டீ காபி கடை, டிபன் சாப்பாடு கடை, மற்றும் ஸ்நாக்ஸ் கடை என நான்கு விதமான கடைகளை இச்செயலியின் உதவியோடு தேடி கண்டுபிடிக்க முடியும்.

எதிர்கால திட்டம்:

அடுத்த ஆறு மாதத்துக்குள் ஆயிரம் சாலை உணவகங்கள் இணைக்க திட்டமிட்டிருக்கின்றோம். விரைவில் ஐ ஓ எஸ் வெளியிடப்படவிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ஒரு கடையை தேடினால், அதை அந்த கடை நடத்துபவருக்கு தமிழில் எஸ் எம் எஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதனால் கடை நடத்துபவர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுவதை தவிர்கலாம். இவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு,  சாலையோர உணவு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், கடை நடத்துபவர்களுக்கும் ஏற்படுத்துவதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்று மேலும் சொல்லி முடித்தார் ரஜோஷி.

த.வினோதா ( மாணவப்பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ