Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எத்தகைய இடர் வந்தாலும் 'சென்னையே எழு' என்று எக்மோர் சொல்லாமல் சொல்கிறதோ? படங்கள்

மீபத்தில் பெய்த கனமழையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும், வெள்ள நீர் சூழ்ந்த தருணத்தில் உதவி கேட்டு அபய குரல் எழுப்பியவர்களுக்கும், உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் தவித்தவர்களுக்கும் நாலா திசைகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டன.

அதுவரை அடுத்த வீட்டுக்காரரின் முகத்தையே பார்த்திராத அபார்ட்மெண்ட்வாசிகள் கூட,  ஆபத்தில் சிக்கிய தரை தளத்தில் வசிப்பவர்களை அரவணைத்து உதவியதும், அப்போதைக்கு தங்களிடம் இருந்த குடிநீரையும், உணவையும் அபயம் தேடி வந்தவர்களுக்கும் பகிர்ந்தளித்து பசியாற்றிய நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் சென்னையின் இன்னொரு ஈர முகத்தை வெளிப்படுத்தின.

பள்ளிவாசலில் தஞ்சமடைந்த இந்துக்கள், மழைவெள்ளம் புகுந்த கோவிலை சுத்தப்படுத்திய இஸ்லாமிய களப்பணியாளர்கள், மழை வெள்ளத்தில் வயிற்றில் குழந்தையுடன்,  மொட்டை மாடியில் சிக்கித்தவித்த தன்னை காப்பாற்றி,  மருத்துவமனையில் சேர்த்த இஸ்லாமிய மனித நேயரின் பெயரை, தனக்கு பிறந்த குழந்தைக்கு சூட்டி நன்றி காட்டிய பெண் என ஆபத்தில் உதவுபவனே ஆண்டவன் என்ற அளவுக்கு பாடம் நடத்திச் சென்ற மழைவெள்ளம், சென்னைவாசிகள் எப்படிப்பட்ட சூழலிலும் எழுந்து நிற்பார்கள்... நின்றார்கள் என்று இந்தியாவின் இதர மாநிலங்களையும், கடல் கடந்த நாடுகளையும் கைத்தட்டி பாராட்ட வைத்தது.

இந்நிலையில் எத்தகைய இடர் வந்தாலும் 'சென்னையே எழு'  தன் பங்கிற்கும்  சொல்லாமல் சொல்கிறதோ சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் இந்த பெயர் பலகை...?

 

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ