Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்டிசம் குழந்தைகள் அல்ல இவர்கள், ஆச்சர்ய விவசாயிகள்!

யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆலம் விழுதுகள் என்ற அமைப்பு,  மக்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வு திண்டிவனம் அருகே கொணமங்களம் என்ற கிராமத்தில் நேற்று நடைபெற்றது. சிருஷ்டி பவுண்டேஷனால் நடைபெற்ற இந்நிகழ்வினை, முகநூல் வாயிலாக உருவான சமூக ஆர்வலர்கள் குழு நடத்தியது.

இங்கு சிருஷ்டி வில்லேஜ் என்ற பெயரில்,  சிருஷ்டி கார்த்திகேயன் என்பவரால் உருவான 9 ஏக்கர் நிலத்தில்  கம்பு, வரகு, சோளம், உள்ளிட்ட வெவ்வேறு வகையான பயிர்கள், மாங்கன்றுகள் பயிரிடப்பட்டுள்ளன. ஆச்சர்யம் என்னவென்றால் இவற்றை பயிரிட்ட விவசாயிகள் அங்குள்ள ஆட்டிசம் பாதித்த மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்.  குழந்தை விவசாயிகளால் நேற்று பயிரிடப்பட்ட பயிர் தமிழ்நாட்டின் பழம் பயிரான பனங்கொட்டை.

நிகழ்வில் ஆட்டிசம் போன்ற மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகள் கூட,  இயற்கையோடு ஒன்றி வாழும்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர் இங்குள்ளவர்கள். மேலும் அங்குள்ள குழந்தைகள் பழகும் விதம் நம்மை வியக்கவைக்கிறது.

இயற்கை விவசாயத்தைப்பற்றி குழந்தைகளிடையே பூச்சி செல்வம் மற்றும் இயற்கை ரவி ஆகியோர் பேசினர்.

நிகழ்வின்போது பாரம்பரிய கலைகளான பறையாட்டம், ஒயிலாட்டம், கதைச்சொல்லி, பேப்பர் கிராப்ட் போன்றவை செய்து காட்டப்பட்டன. குழந்தைகள் அதனை கற்றுக்கொண்டபோது குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தென்பட்டது.

- உ. சௌமியா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ