Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொங்கலுக்காக தயாராகும் மண்ட வெல்லம்!

தை திருநாளான பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில்,  மண்ட வெல்லம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன வெல்ல தயாரிப்பு ஆலைகள்.

காங்கேயம்-ஈரோடு சாலையில் உள்ளது வடபழனி என்ற ஊர். இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட மண்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு வசிக்கும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

வெல்லம் தயாரிக்கும் தொழிலாளி நடராஜனிடம் பேசினோம். "நாங்க நாப்பது வருஷமா வெல்லம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறோம். பொங்கல்னாலே எல்லோருக்கும் சர்க்கரை பொங்கல்தான் ஞாபகத்துக்கு வரும். நாங்க கரும்பை விலைக்கு வாங்கி, வெல்லம் தயாரிக்கிறோம். ஒரு டன் கரும்பு ரூ.1250-ல் இருந்து 1300 ரூபாய் வரை கொடுத்து வாங்குகிறோம்.

கரும்பு சாற்றை நல்லா சுண்ட காய்ச்சி, நல்ல பதம் வந்த பின், அதை பாகு தட்டில் ஊற்றி ஆற வெக்கணும். அடுத்து ஒரு துணியில ஒரு பிடி அளவு வெச்சு உருட்டி, காய வெச்சு பேக் பண்ணுவோம். 750 கிலோ கரும்பு சாற்றை சுண்ட காய்ச்சுனா 90 கிலோ வெல்லம் செய்யலாம். மூட்டைக்கு 30 கிலோ பேக் செஞ்சு மார்க்கெட்டுக்கு அனுப்புகிறோம். ஒரு மூட்டை 850 ரூபாய்ல இருந்து 900 ரூபாய் வரைக்கும் விற்கும்.

பண்டிகை காலம்னா கெஞ்சம் அதிக விலைக்கு விற்கும். கரும்புல இருந்து வருகிற எந்த பொருளும் வீணாகாது. சக்கைய காய வெச்சு கரும்பு சாறு காய்ச்ச பயன்படுத்திக்குவோம். காய்ச்சும் போது வருகிற கேலைய உரமா பயன்படுத்தலாம்'' என்றார்.

க.சத்தியமூர்த்தி
(மாணவ பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close