Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்பு எங்கே... எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகணும்... ?

ருஷம் முடியப் போகுது. இன்னும் கொஞ்ச நேரத்துல கமல் ஹைபிட்ச்ல 'ஹாப்பி நிய்ய்ய்யூ இயர்ர்ர்ர்'-னு கத்திட்டே ஓடி வர்றது மட்டும்தான் பாக்கி. அதுவரைக்கும் சந்தோஷம்தான். ஆனா, இந்த வருசம் நடந்த சில விஷயங்களுக்கு விடை தெரியாம மனசாட்சி மழை சீசன் கொசு மாதிரி நசநசங்குது!

* மோடி மொத்தம் எத்தனை நிமிஷம்ய்யா இந்தியால இருந்தாரு? இந்த கேள்விக்கு கூகுளே கன்ஃபியூஸ் ஆகுதேய்யா... சொல்லுங்களேன் யாராவது!

* ராகுல்ங்கிற அந்த பச்சைக் குழந்தையை இந்த வருசத்துல ரெண்டு மாசம் எங்கய்யா ஒளிச்சு வச்சுருந்தீங்க? பாவம் அந்த பச்சை மண்ணுக்கு பேச்சு கூட சரியா வராதேய்யா. அவr ஒளிச்சு விளையாட எப்படிய்யா மனசு வந்தது?

* நியூட்டன் மரத்துக்கு கீழ தேவுடு காத்து, மண்டைல ஆப்பிள் கொட்டு எல்லாம் வாங்கி கண்டுபிடிச்ச லா ஆப் கிராவிட்டிய எப்புடி விஷாலால சுமோ வச்சு அசால்ட்டா முறியடிக்க முடிஞ்சது? இதை பத்தி ஏன் எந்த சயின்டிஸ்ட்டும் ஆராய்ச்சி பண்ணலை?

* போன வருஷம் வரை அவரில்லாம ஒரு கட்டுரை இல்ல. ஸ்டேட்டஸ் இல்ல. இப்போ ஊருக்குள்ள சுத்துற பெரிய பெரிய மீம் கிரியேட்டர்ஸ் எல்லாம் அவரை அடிச்சு பெரியாளு ஆனவங்கதான். அப்பேர்ப்பட்ட எங்க தானைத்தலைவன் மன்மோகன் சிங் எங்கய்யா இருக்காரு இப்போ?

* வாய்ப்பாடு ஒழுங்கா சொல்ல வராத வாய் கூட ஒரு கோர்ட் கணக்குல கோளாறு கண்டுபிடிச்சதே? அந்தக் கணக்கு ரிசல்ட் என்னாச்சுய்யா? சரியா தப்பா...?

* வேதாளம் மாதிரி தலைகீழா தொங்கிக் கூட பாத்துட்டேன். எந்த ஏங்கிள்ல பாத்தாய்யா அமிதாப்,  சிவாஜி மாதிரி தெரியுறாரு? கனவுன்னாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா?

* இஸ்கூல்ல எஸ்.டி.டி ஒழுங்கா படிக்காதவன்கூட இந்த கேள்வியை கேட்டுகிட்டு திரிஞ்சான். ’கட்டப்பா ஏன்யா பாகுபலியை குத்துனாப்ல?’ சம்பவம் நடந்தது நைட்டு நேரம். ஒரு வேளை... அடப்பாவிகளா டாஸ்மாக்கை மூடுங்கன்னு தலைப்பாடா அடிச்சுகிட்டோமே. கேட்டீங்களா?

* வாட்ஸ்அப்ல குபீர் கிளப்புன ஹரஹரமகாதேவகி சாமியார் எங்கேய்யா போனாப்ல?

* மலையாளத்துல ஹிட் அடிக்கிற படத்தை எல்லாம் ரீமேக் பண்றோம்னு சேட்டு பீடாவை குதப்புற மாதிரி குதப்புறீங்களே? ஏன்ய்யா? அதுவும் பிரேமம் ரீமேக் கேஸ்டிங் பாத்தாலே அடிவயிறு கவ்வுதே... ஐயோ!

* கத்தி படம் வந்தப்போ லைகாக்கு அன்லைக்னு கத்துனீங்களே? நானும் ரவுடிதான், எந்திரன்- 2னு வரிசையா வர்றப்போ அ.தி.மு.க அமைச்சர் மோடுக்கு போயிட்டீங்களே? உங்க தமிழுணர்வு எல்லாம் வாடகை சைக்கிள்ல போயிடுச்சா?

* அதெப்படி ஸ்டாலின் கூட்டமா இருக்குற இடத்துக்கு போறப்போ எல்லாம் அவர் கை வழுக்கி யார் கன்னத்துலயாவது லேண்ட் ஆவுது?

* புலி படம்,  பாகுபலிக்கே பிம்பிலிக்கா பிலாப்பி காட்டும்னு கிளப்பி விட்ட புண்ணியவான் யாரு? யாரு? யாரு? இப்போ அவரு எங்கே என்ன பண்ணிட்டு இருக்காரு?

* நீங்க நிவாரண வேலை பாக்காததை கூட மன்னிச்சுடலாம்ய்யா. ஆனா மிலிட்டரி வண்டிய மறிச்சு ஸ்டிக்கர் ஒட்டுற ஐடியாவை சொன்ன மகராசன் யாருய்யா? அந்த அகண்ட மூளைக்காரனை இந்த தமிழகம் பார்த்தே ஆகணும்!

* சல்மான் கார் ஓட்டலை. ஆனா டிரைவர் சீட்ல இருந்தது அவர்தான். அதுக்காக டிரைவர் சீட்ல இருக்குறவர் எல்லாம் டிரைவர் ஆயிடுவாங்களா? ரொம்ப குழப்புதுல. யாராவது இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கய்யா.

* 'அம்மாவின் ஆணைக்கிணங்க மழை' சயின்ஸ் கூட புரிஞ்சுடும் போல. இந்த 'ஆலுமா... டோலுமா...' லிரிக்ஸ் புரியவே இல்லையேய்யா. என்ன அர்த்தம் அதுக்கு?

* நட்ராஜை ஏன் கட்சியைவிட்டு நீக்குனாங்க. ஒரே நாள்ல ஏன் திருப்பி சேத்தாங்க? மிக முக்கியமா அவரு ஏன் எதுக்குமே ரியாக்ட் பண்ணாம மத்தியான நேரம் வெண்பொங்கல் சாப்பிட்ட மாதிரியே இருக்காரு?

* விஜயகாந்த் பா.ஜ.க.வோட கூட்டணில இருக்காரா இல்லையா? ஒருபக்கம் அவர் எங்களோட இருக்கார்னு பா.ஜ.க சொல்லுது. இன்னொரு பக்கம் தி.மு.க, ம.தி.மு.க எல்லாம் வலை விரிக்குது. கேப்டன் என்ன கோயில் பிரசாதமாய்யா ஆளுக்கு கொஞ்சம் அள்ளி வாய்ல போட்டுக்க?

* இதுதான் இந்த வருஷத்தோட ரொம்ப முக்கியமான கேள்வி. கொஞ்ச நாள் முன்னாடி வரை சென்னைடா, தமிழன்டானு ஒண்ணு மண்ணா இருந்த பசங்களை எல்லாம் ஒரே ஒரு பாட்டை லீக் பண்ணி மண்டை உடைய மல்லுகட்ட வைச்சு சிம்பு ராசா... நீ எங்கேய்யா இருக்க?

இது போல கேள்விகள் உங்களுக்கும் தோணுச்சா... ஸேம் பீலிங்! ஸ்டிக்கர் ஒட்டு... கொண்டாடு!

- நித்திஷ் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close