Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் 'கலாம்'!

சாக்லேட் என்று சொன்னதும் 6 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட சாக்லேட்டில் ஒரு மாமனிதரின் உருவ சிலையை செய்து இருந்தால் யாருக்குதான் அச்சிலையை பார்க்கவேண்டும்  என்று ஆசை இருக்காது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டாலும், அவரது நினைவுகள், அவர் நமக்கு கற்று கொடுத்த பாடங்கள் எல்லாம் நம்மால் எப்படி மறக்க முடியும்? காலம் மாறிப் போகலாம், ஆனால், நம் மனதை விட்டு கலாம் மாறிப்போக மாட்டார்.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள சூகா நிறுவனம், அவரது உருவ சிலையை சாக்லெட்டால் வடிவமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர்.

இதுகுறித்து சூகா நிறுவன தலைமை செஃப் ஸ்ரீநாத் பாலச்சந்திரன் கூறுகையில் ''ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வித்தியாசமான சாக்லேட் பொம்மைகளை செய்து வருகிறோம். சென்ற வருடம் மகாத்மா காந்தியின் உருவ சிலையை சாக்லேட்டால் செய்து இருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, அடுத்த வருடம் (இந்த வருடம்) யாருடைய சிலையை சாக்லேட்டால் செய்யப் போகிறீர்கள் என்று பல வாடிக்கையார்கள் ஆர்வமுடம் கேட்டனர். எனவே, இந்த ஆண்டு ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். அதில் அதிகமான மக்கள் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் சிலையை சாக்லேட்டால் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதனால், இந்த ஆண்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சாக்லேட் கலாமை செய்து இருக்கிறோம். கலாம் அவர்களின் சாக்லேட் சிலையை செய்ததற்காக சூகா நிறுவனம் மிகவும் பெருமைப்படுகிறது” என்றார்.

இச்சிலை சுமார் 400 கிலோ எடையும், 5.9 அடி உயரமும் கொண்டதாக உள்ளது. இது கலாமின் உண்மையான உயரமாகும். சூகா நிறுவன தலைமை செஃப் ஸ்ரீநாத், செஃப் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இணைந்து சுமார் 180 மணி நேர உழைப்பில் செய்திருக்கின்றனர். மேலும், இச்சிலை முழுக்க முழுக்க edible சாக்லேட்டால் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சிலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுல்லா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இச்சிலை இன்னும் ஒருவாரம் காட்சிக்கு வைக்கபட்டு இருக்கும்.

சு.கற்பகம்
(மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: எஸ்.தேவராஜ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ