Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரல்நுனியில் தேசப்பற்று... கின்னஸ் சாதனை புரிந்த பள்ளி மாணவர்கள்!

ஈரோடு:  கட்டை விரல் ரேகையால் ஒரே நேரத்தில் அதிக தேசியக்கொடிகளை வரைந்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சாரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

இந்த பள்ளியின் 758 மாணவர்கள் இந்த சாதனையில் பங்கேற்றனர். காலை எட்டரை மணிக்கு மாணவர்கள் தங்களது வலதுகை கட்டைவிரலை பயன்படுத்தி நமது தேசியக்கொடியின் வண்ணங்களை கைவிரல் ரேகையாலேயே வரையத்தொடங்கினார்கள். இரண்டு மணி நேரத்தில் அந்த கொடி வரைந்து முடிக்கப்பட்டது.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....



இந்த சாதனையை ஆய்வு செய்வதற்காக,  சிங்கப்பூர் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் இந்திய ஆய்வு அதிகாரி செந்தில்குமார், மும்பை இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவன ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

உலக சாதனை நிறுவன விதிமுறைகளின்படி தேசியக்கொடி வரையப்பட்டிருப்பதால்,  சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 758 மாணவிகளால் படைக்கப்பட்ட,  உலகிலேயே மிக அதிகமான நபர்களால் ஒரே சமயத்தில் கட்டைவிரல் அச்சுக்களை வைத்து உருவாக்கப்பட்ட தேசியக்கொடிகள் எனும் சாதனையை இந்த கொடிகள் பெற்றிருக்கிறது.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....

சாதனை படைத்த அத்தனை மாணவிகளையும் வந்திருந்த அனைவரும் வாழ்த்தினார்கள் நாமும் வாழ்த்துவோம்.

- வீ.மாணிக்கவாசகம்
படங்கள்; ரமேஷ் கந்தசாமி

மேலும் படங்களுக்கு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close