Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் உடைத்தெறிய வேண்டிய 13 கெட்ட பழக்கங்கள்!

1. தோன்றும் போதெல்லாம் வலைதளங்களை அலசுதல்

நம்மில் பலருக்கும் இன்று விரல்நுனியில் இணைய வசதி இருப்பதால் மனதில் சிறு கேள்வி உதித்தால் கூட செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு 'சர்ச்' செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். இவ்வகையான தேடல்கள் நேரத்தை விரயமாக்கி, நம் வேலையையும் பாதிக்கும்.

இதை தவிர்க்க,  வேலை நேரத்தில் தோன்றும் கேள்விகளையெல்லாம் ஒரு நோட்பேடில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், ஓய்வு நேரத்தில் இந்த ஆற்றல் நிறைந்த தேடலில் ஈடுபடலாம்.2. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது

இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2% மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும்.3. மெசேஜ், ஈமெயில் ஏதும் வருகிறதா என ஓயாமல் கவனிப்பது

இது ஒரு வகையான மயக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கம் வேலையை மட்டுமல்ல மனநிலையையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

4. நமக்கு நாமே காரணம் தேடிக் கொள்ளுதல்

ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை மறந்தால் அதற்கு நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொண்டு, எடுத்த செயலை அப்படியே விட்டுவிடுவோம். தினமும் அதிகாலை எழ வேண்டும் என்ற நம் புத்தாண்டு உறுதிமொழி போல. இப்படி நாம் காரணங்கள் சொல்லி கழட்டிவிட்ட காரியங்களே பெரிய தடை.5. அநாவசிய சந்திப்புகள்

ஆன்-லைனிலேயே பல வேலைகளை முடிக்கும் அட்வான்ஸ்டு டெக்னாலஜி காலத்தில், தேவையில்லா நேரடி சந்திப்புகளை குறைத்துக் கொள்ளலாம். தெளிவில்லாத சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

6. ஒத்திவைத்தல்

அப்புறம், பிறகு, நாளை என தள்ளிப்போட்டு பல காரியங்கள் ஒரேயடியாகக் காணாமல் போன கதைகள் உண்டு. அதேபோல் சுலபமான வேலைகளை முதலில் முடித்துவிட்டு கடினமானதை கடைசியில் செய்வோம் எனவும் மறந்துவிடுவோம். இது தவிர்க்க வேண்டிய முக்கியப் பழக்கம்.7.ஒரே இடத்தில் ஆணி அடித்தது போல் உட்கார்ந்திருப்பது

வீடோ அல்லது அலுவலகமோ ஒரே இடத்தை தேய்க்காமல் அவ்வப்போது சிறிது தூரம் காலார நடப்பது,  கணினித் திரையை விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.8. முக்கியத்துவம் அளித்தல்

நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.

9. கண்விழித்த பிறகும் படுக்கையில் சுருண்டு கிடப்பது

படுக்கையில் 'இன்னும் 5 நிமிஷம்' என்று கேட்பவர்களில் பெரும்பாலானோருக்கு அப்பழக்கம்,  கூடுதல் எனர்ஜி, மேம்பட்ட சிந்தனை என கேட்பதில் இருப்பதில்லை. நிறைவான இரவுத் தூக்கமும் அதிகாலை கண்விழிப்பும் சிறந்ததொரு நாளைத் தரும்.

10. ஓவர் ப்ளானிங் உடம்புக்கு ஆகவே ஆகாது

லட்சிய வெறி கொண்டோர் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்கமாட்டேன் என்ற பெயரில் தீவிரமாகப் ப்ளான் போட்டு செயல்படுவர். தங்கள் திட்டத்தில் சின்ன தடங்கள் ஏற்பட்டால் கூட சோர்ந்துவிடுவார்கள். இது பெரிய தடை.11.திட்டமிடல் இல்லாமை

எந்த திட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் போகிற போக்கில் வென்றிவிட முடியாது. இந்த எல்லையும் ஆபத்தானதே. லட்சியமில்லா வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாகிவிடும்.12. செல்போனை கட்டி அழுதல்

LED ஸ்கிரின்கள் கொண்ட செல்போன், லேப்டாப் போன்றவை வெளியிடும் ஒளி கண் திரையை பாதிக்கக்கூடியவை. தூங்கும் போது கூட செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்குவோர் தான் அதிகமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

13. மிஸ்டர்.பெர்ஃப்க்ட்

எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்போர் செயல்படுவதைக்காட்டிலும் வேலையை  தள்ளிப்போடுபவராகவே உள்ளனர். நேர்த்தி எல்லா விஷயத்திலும் கிடைத்துவிடாது. எல்லாராலும் மிஸ்டர்.பெர்ஃப்க்ட் ஆக முடியாது. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.மேலே உள்ள விஷயங்களை கடைபிடித்தால் உங்களது முன்னேற்றத்தை நீங்களே உணருவீர்கள்!

-- மு.ஜெயராஜ் (மாணவப் பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ