Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதிக்க தன்னம்பிக்கை போதும்: கட்டடவியல் துறையில் அசத்தும் ஜெயந்தி!

"ஹைடெக் யுகத்தின் எவர்கிரீன் துறையான கட்டடவியல் துறையில் ஆலவிருட்சமாய் களம் இறங்கிவிட்டேன். பெத்தவங்களுக்காகவும், மத்தவங்களுக்காகவும் பிடிக்காத துறையில் பட்டம் படிச்சு பிடிக்காத துறையில் வேலைப் பார்க்கும் காலம் எல்லாம் மாறிப்போச்சு" என்கிறார் கிஷோர் கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளர்  ஜெயந்தி.

ஆண்கள் மட்டுமே நிலைத்து நிற்கக் கூடியக் கட்டடவியல் துறையில் நுழைந்ததோடு மட்டும் அல்லாமல் லெஃப்ட், ரைட்டு, U டர்ன் போட்டு வந்து நிற்கிறார். தன்னுடைய 30 வயதுக்குள் 100 வீடுகளைக் கட்டி சாதனைப் புரிந்த ஜெயந்தி தன் அனுபவங்களைப் பற்றி நம்மோடு பேசத் தொடங்கினார்...

"கிண்டர் கார்டன் படிக்க ஆரம்பிச்சதுல இருந்தே ஏதேனும் சாதிக்கனும்ங்கற உணர்வு எனக்குள்ள இருந்ததால தான் பிற்காலத்துல என்னால் ஒரு மேடைப்பேச்சாளரா வரமுடிஞ்சது. சிறுவயதிலிருந்தே இலக்கியப் போட்டிகள் என்றால் விடாமல் கலந்துகொள்வேன். அதுவே என்னை கல்லூரியின்போது மேடைப்பேச்சுகளில் களம் இறக்கி விட்டது.

பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் அப்போது பட்டிமன்றப் புகழ் ராஜா, நாங்களாம் ஒரே டீம். ஆனால் எனக்கான துறையை நான் மாற்றி கொண்டுவிட்டேன்."

 

"சாதாரணக் குடும்பத்தில் பிறந்து Diploma கட்டடவியல் முடித்து ஒரு கம்பெனியில் பணிபுரியத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, INTACH நிறுவனத்தில் ஆர்கிடெக்ட் அஸிஸ்டெண்டாக எனது கட்டடவியல் துறைப்பணியைத் தொடர்ந்தேன். இங்கு தான் நான் கட்டடவியல் பணி அனைத்தையும் கற்றுக்கொண்டேன். அதன் பின் தான் எதிர் காலத்தில் ஒரு கட்டடவியல் நிபுணராக வரவேண்டும் என்று மனதில் உறுதி கொண்டு அதுக்காகவே தயாரானேன்.

தொலைதூரக்கல்வி முறையில் B.Tech பயின்று மாத சம்பளம் பெற்று ஹைடெக் வாழ்க்கை தான் கிடைக்க போகிறதே என்று சும்மா இருக்க மனது ஒத்து வர வில்லை. எனவே தனியே கிஷோர் கன்ஸ்ட்ரக்‌ஷனை ஆரம்பித்து புதுவை மற்றும் விழுப்புரத்தில் ப்ராஜெக்டுகள் பல முடித்து வெற்றி பெற்றிருக்கிறேன். பின் 2013-ல் M.Tech சிவில் முடித்தேன்.

எனது முதல் ப்ராஜெக்ட் அருள் இல்லம். மறக்க முடியாத ஒன்று. நானே ஒரு இடத்தைப் பிடித்து கட்டுமான பணிகளை 6 மாத காலத்தில் முடித்து அதற்கான வாடிக்கையாளரையும் தேடிப்பிடித்து எனது முதல் ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்தேன்" என்று கூறினார்.

தற்போது அவர் சொந்த ஊரான புதுவை மற்றும் விழுப்புரம் மட்டும் அல்லாது கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை என்று தமிழ் நாடு முழுவதும் ப்ராஜெக்ட்கள் முடித்து கொடுத்திருக்கிறார். இன்னும் ப்ராஜெக்ட்கள் செய்து கொண்டிருக்கிறார். "வேலை என்றால் எல்லாமே வேலை தான். பலர் தனது ப்ராஜெக்டுகள் அல்லமால் பிறர் முடித்த ப்ராஜெக்டுகளைப் புதுப்பிக்ககூட செல்ல மாட்டார்கள்.

ஆனால் ஒரு காலத்தில் அது அவரகளது கனவு இல்லமாக இருந்திருக்கக்கூடும். எனவே எந்த வகையான வீடாக இருந்தாலும் அதனை சீரமைத்து, வாஸ்து திருத்தங்கள் செய்து தருவேன். இது போன்ற கனவு வீடுகளைச் சீரமைப்பதற்காகவே நான் வாஸ்து பயின்றேன்" என்று சந்தோசமாகக் கூறுகிறார்.

 அவர் இப்போது ப்ராஜெக்ட்களை நடத்திக் கொண்டிருக்கும் வண்டிமேடு பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு எங்கு பார்த்தாலும் இவர் கட்டிய வீடே காணப்பட்டது. வீடுகள் மட்டுமல்லாது கல்யாண மண்டபம், மருத்துவமனைகள், ரெஸிடென்சியல் ஹால்,அலுவலகக்கட்டிடங்கள், ரெஸ்டாரண்ட் என எல்லாவித ப்ராஜெக்ட்களையும் செய்து முடித்து கொடுத்திருக்கிறார். தற்போது விழுப்புரம் அருகில் உள்ள மல்லிகைப்பட்டு என்ற இடத்தில் மிகக் குறைந்த செலவில் ஒரு பள்ளிக்கூடம் சேவை மனப்பான்மையில் கட்டிவருகிறார்.

"எல்லாத்துறைகளிலும் பெண்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்டடவியல் துறையில் அவ்வாறு இல்லை. கால நிர்ணயம் கிடையாது. காலை சென்று மாலை திரும்பும் வேலை இல்லை இது. இரவு 11 மணியானாலும் சைட்டில் பிரச்சனை என்று சொன்னால் உடனே போய்ச் சரி செய்தாக வேண்டும். அடுத்து அதிகாலை 4 மணிக்கும் ஒரு ஃபோன் கால் வரும் பிரச்சனை என்று அதனையும் சரி செய்ய வேண்டும்.

பொதுவாக கட்டுமானம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் உடல் முழுவதும் அழுக்கு, மண், சிமெண்ட் போன்றவை உடைகளை வீணாக்கும் என்றும் இரவு நேரத்தில் பிரச்சனைத் தீர்க்க செல்வதா என்றும் தயங்குவார்கள். ஆனால் எனக்கு அந்த கவலைகள் கிடையாது எனவே என்னைப் போன்ற பலர் இந்த துறைக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.

அப்படி நினைத்துவரும் பெண்களுக்கு எவ்வித பிரச்சனைகள் வந்தாலும் அதனைத் தீர்த்துவைக்க நான் தயாராக உள்ளேன். இது மட்டும் அல்லாமல் வாழ்வில் எத்தகைய பிரச்சனை வந்தாலும் அதனை சமாளித்து என்னை போன்று முன்னேற கவுன்ஸ்லிங்க் கொடுத்துவருகிறேன்.

 உழைக்காமல் உயர நினைப்பதே பெண்களின் பலவீனம். வீட்டில் ஆண்களின் முன்னேற்றத்தில் தாங்கள் முன்னேற வேண்டும் என்று நினைப்பது தான் தவறு. குடும்பத்தின் முன்னேற்றம் பெண்ணையும் சார்ந்திருக்க வேண்டும். தனக்கு ஏதேனும் பிரச்சனை வரும் என்றால் அதனை அண்ணன் தம்பியிடம் சொன்னால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று பயந்து வாழவேண்டியது இல்லை.

வெளியே யாரிடமும் சொல்ல வேண்டியதும் இல்லை நாமாகவே அதனைத் தீர்த்து கொள்ளும் திறன் பெண்களிடம் இருக்கிறது அதனைப் புரிய வைத்து விட்டால் எல்லா பெண்களும் சாதனையாளர்கள்" தான் என்கிறார் ஜெயந்தி.

"சாக்கடை குடிநீர் ஆவதற்கும், குடிநீர் சாக்கடை ஆகாமல் தடுப்பதற்கும் பராமரிப்பு தேவை என்பது போல ஒரு பெண் தோல்வி அடந்தவளா? அடையாதவளா என்பது முக்கியம் இல்லை. ஆனால் தோல்வியைச் சமாலிக்க அவர்களுக்குக் கவுன்சிலிங்க் தேவை. அக்காலத்திலிருந்தே பெண்கள் தன்னைச் சுமப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் சுமக்க ஆணைவிட பெண்ணுக்கே அதிக சமூக ஈடுபாடு வேண்டும்.

நான் ஏன் இந்த கவுன்சிலிங்கில் கால் எடுத்து வைத்தேன் என்றால் என்கிட்ட இருந்து கிடைக்கக்கூடிய ஒரு வார்த்தையில் ஒரு வாழ்க்கை வாழலாம் என்பதற்காக தான்" என்று பெருமையோடு கூறுகிறார்.

கடைசியாக ஒன்று சொல்கிறேன் இது அனைவருக்குமே பொருந்தும். சாதித்த யாரும் முதலீடோடு வரவில்லை தன்னம்பிக்கையோடு தான் வராங்க என்று கூறிப் புன்முறுவல் புரிகிறார் ஜெயந்தி!

உ. சௌமியா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

படங்கள்: தே.சிலம்பரசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close