Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலினம் சார்பற்ற கழிப்பறை… பீட்சா உணவகத்தின் புதிய திட்டம்!

பொது இடங்களில் திருநங்கைகள், மகள்களுடன் வரும் தந்தைகள், மகன்களுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத் திறன் குழந்தைகளின் பெற்றோர் என பலர் சந்திக்கும் பிரச்னை, "ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள்". இதற்கு தீர்வாக அமையும் வகையில், அமெரிக்காவின் வட கேரோலினா மாகாணத்தில் உள்ள, சார்லெட் நகரின் ப்யூர் பீட்சா உணவகத்தில், பாலினம் சார்பற்ற கழிப்பறையை, அந்த உணவகத்தின் உரிமையாளர் ஜூலி மெட்காஃப் காஜி உருவாக்கியுள்ளார்.

கழிப்பறையின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு காகிதத்தில், "ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள், பலருக்கு சங்கடமான சூழலை உருவாக்குகின்றன. இதுவே, இந்த பாலினம் சார்பற்ற கழிப்பறையை அமைத்ததன் காரணம். இதன் மூலம், இந்த உணவகத்திற்கு வருகை தரும் நம் நண்பர்களான, திருநங்கைகள், ஓரின சேர்க்கையாளர்கள், மகள்களுடன் வரும் தந்தைகள், மகன்களுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர், உடல் அல்லது மனதளவில் பாதிக்கப்பட்ட வயதான பெற்றோருடன் வரும் பிள்ளைகள், ஆகியோருக்கு ஏற்ற இடமாக இது அமையும்" என எழுதப்பட்டுள்ளது.



சார்லெட் நகர பொதுமக்கள் குழு, LGBT எனப்படும் திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கான பாகுபாடற்ற நியமனங்களுக்கு, பலமுறை அனுமதி மறுத்ததுதான், ஜூலிக்கு, இந்த பாலினம் சார்பற்ற கழிப்பறையை உருவாக்குவதற்கான தூண்டுதலை அளித்துள்ளது. "எங்கள் உணவத்திலேயே, கணவனை பிரிந்த மனைவிகள், மனைவியை பிரிந்த கணவர்கள், LGBT சமுகத்தை சார்ந்தவர்கள் என பலர் பணிபுரிகின்றனர். இதுவே பாலினம் சார்பற்ற கழிப்பறையை உருவாக்க ஓர் முக்கிய காரணமாக அமைந்தது." என ஜூலி கூறியுள்ளார்.

இப்போதைக்கு, ப்யூர் பீட்சா உணவகத்தில், பாலினம் சார்பற்ற கழிப்பறை ஒன்றும், பெண்களுக்கான கழிப்பறை ஒன்றும் உள்ளது. இந்த பாலினம் சார்பற்ற கழிப்பறைகளின் நன்மைகள் குறித்து, சார்லெட் நகர பொதுமக்கள் குழுவில் பேசப்போவதாகவும் ஜூலி கூறியுள்ளார். நம் நாட்டிலும், இது போன்ற பாலினம் சார்பற்ற கழிப்பறைகள் அமைப்பதால், மேலே குறிப்பிட்ட LGBT மக்களுக்கும், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

-ஜெ. விக்னேஷ்
(மாணவ பத்திரிக்கையாளர்)       

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close