Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒபாமாவிடம் அறிவியலுக்கான விருது பெறக் காத்திருக்கும் இந்திய விஞ்ஞானி!

அறிவியல், பொறியியல், மருத்துவம், கணிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கான அமெரிக்க தேசிய விருதை, அதிபர் ஒபாமாவிடமிருந்து வரும் ஜனவரி 22-ம் தேதி அமெரிக்க வாழ் இந்தியரான ராகேஷ்.கே.ஜெயின் பெறுகிறார்.

பலதரப்பட்ட அறிவியல் துறைகளிலிருந்து 17 விஞ்ஞானிகள் இவ்விருதை,  வரும் 22- ம் தேதி வெள்ளை மாளிகையில் நடக்கும் விழாவில் பெற இருக்கின்றனர். இதில் ஒருவராக  தேர்வு செய்யப்பட்டிருப்பவர்தான் விஞ்ஞானி ஜெயின். ஐஐடி-கான்பூர் முன்னாள் மாணவரான இவர்,  அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  தற்போது ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் ட்யூமர்-பயாலஜி துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

பயோ-இன்ஜினியரிங் துறை வல்லுனரான  ஜெயின், இதுவரை 75க்கும் மேற்பட்ட விருதுகளை மருத்துவ - இன்ஜினியரிங் துறையில் சாதித்ததற்காக பெற்றுள்ளார். ட்யூமர் பாதிப்புகளுக்கு தரப்படும் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளுக்கான ஆய்வில் சிறந்து விளங்கி,  ஒரு புதுப் பாதையை ஏற்படுத்தித் தந்தவர். அமெரிக்காவின் முக்கிய அறிவியல் மையங்களான தேசிய மருத்துவ அகாடமி, தேசிய பொறியியல் தொழில்நுட்ப அகாடமி, அமெரிக்க கலை, அறிவியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகிவற்றில் உறுப்பினராக உள்ளார். தற்போது அமெரிக்காவின் தேசிய விருது இவருக்கு காத்திருக்கிறது.

1962 முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் செய்திக்குறிப்பில், "இந்த அறிவியல் சாதனையாளர்களின் பணி, நாட்டின் அறிவியல் மரபினை இவ்வுலகுக்கு மென்மேலும் பறைசாற்றும்படி அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

-ராகினி ஆத்ம வெண்டி

(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ