Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யெஸ் பாஸ்... நீங்கள் யாரிடம் சொல்ல விரும்புகிறீர்கள்?

யாருக்கு கீழ் பணியாற்ற நீங்கள் விரும்புவீர்கள்...யாராக இருந்தாலும் கவலையில்லை என்பவரா நீங்கள்...?

இன்றைய கார்பரேட் உலகத்தில் பணியாற்றுவதற்கு செயல் திறன் மட்டுமே முக்கியம். மற்றபடி வயது இனம் பாலினம் உடற்திறன் எதுவும் கணக்கில்லை. ஆளுமையும் திறமையும் தன்னம்பிக்கையும் துணிந்து முடிவெடுக்கும் திறன் கொண்ட ஒரு நல்ல தலைவரே இன்றைய தேவை.

இந்த தலைப்பை கேள்வியாகக் கொண்டு இந்தியா முழுவதும் shine.com நடத்திய ஆய்வில், 53% பேர் பணியிடத்தில் ஆண் பெண் வேறுபாடு பெரிய விஷயமே இல்லை எனக் கூறுகின்றனர். 27% பேர் ஆண் மானேஜர்களிடமும், 20% பேர் பெண் மானேஜர்களிடமும் வேலை பார்க்க வசதியாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.

73% பேர் முதலாளியின் ஆளுமையே அவரது பாலினத்தை விடப் பெரியது எனக் கூறினார்கள். 20 வருடம் வரை அனுபவமுள்ள பல்வேறு நிலைப் பணிகளில் இருக்கும் 1500 பணியாளர்களிடம் நடத்தப்பட்டது இந்த ஆய்வு.

19% பேர்,  பணியிட தலைவரின் ஆளுமை முக்கியமல்ல எனவும்,  8% பேர்  கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

64% பேர் பாலினம் ஆளுமையையும்,  வேலைத்திறனையும் தீர்மானிக்காது என்றும்,  20% பேர் பெண் பாஸாக இருந்தால் உடன் வேலை செய்ய சவுகரியமாக இருக்கும் என்றும், 16% பேர் பெண் முதலாளிகள் நாட்டாமை செய்பவர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆண் பாஸ்கள் குறித்து கேட்ட போத 44% பேர்,  யாரா இருந்தால் என்ன என்று கூறியுள்ளனர்.  30%  பேர் பெண் முதலாளிகள் ஊக்கமளித்து, தொழிலாளர்களையும் முன்னேற்றி,  நிறுவனத்தையும் முன்னேற்றுவர் என்றும், 26%  பேர் தலைமைப் பண்பும் சமாளிக்கும் திறனும் ஆண் பாஸ்களுக்கே உரித்தானது என்றும் தெரிவித்துள்ளனர்.

பெண் பணியாளர்களுக்கு எதிராக உடைத்தெறியப்பட வேண்டிய 7 கட்டுக்கதைகள்:

ஆய்வின்படி 63% பேர்களுக்கு சம்பளமோ போனஸோ பாலின அடிப்படையில் வழங்கப்படுவதில்லை.

20% ஆண் பாஸ்கள், சம்பளம் போனஸ் விஷயத்தில் யதார்த்தமாக ஆனால் மிகச் சரியாக வேலையின் அளவுகோல் பார்த்துதான் தருவர்.

17% பெண் பாஸ்கள் இந்த விஷயத்தில் சமநிலையாளர்கள்.

இது தொடர்பாக 'ப்யூ' ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலையாய தலைமைப் பண்புகள் நேர்மை, புத்திக்கூர்மை, ஒருங்கிணைப்பு, தேர்ந்த முடிவெடுக்கும் தன்மை என அனைத்தும் எல்லா தலைவர்களுக்கும் பாலின பேதமின்றி உரித்தானவையே.

ஆணோ பெண்ணோ தலைமைப் பண்பாளர்கள் அவரவர் இடத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலை செய்ய முடியாது, ரிஸ்க் எடுக்க மாட்டார்கள், ஒரு பெண் வழிகாட்டியாக முடியாது என  எந்தவொரு நிறுவப்பட்ட தரவுகளோ, ஆய்வுகளோ இல்லை.

இந்த பாலின பாகுபாடுகள் எல்லாம் லட்சியம், கருணை, புதுமையான சிந்தனை இதில்தான் உள்ளதாகக் கூறப்படுகிறது.

66% பெண்கள் ஒரு தலைவருக்கு கருணை தேவை எனக் கூறுகின்றனர். ஆனால்  47% ஆண்கள்தான் கருணை தேவை எனக் கூறுகின்றனர்.

புதிய சிந்தனை வேண்டுமென 61% பெண்களும் 51% ஆண்களும் கூறுகின்றனர். ஒரு தலைவருக்கு லட்சியம் தேவையென 57% பெண்களும் 48% ஆண்களும் கூறுகின்றனர்.

-மு.ஜெயராஜ்

(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ