Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹைபிரிட் கார்

" 'இப்பொழுது எல்லாம் இன்ஜினியரிங் படித்தால் வேலைக்கு ஆவதில்லை,வெறும் பெயருக்கு பின் போட மட்டுமே BE உதவும்' என்பதெல்லாம் கட்டுக்கதை. ஒரு வெறியுடன் அனுபவித்துப் படித்தால்,  எங்களைப் போன்று 100 குழுக்கள் கூட உருவாகலாம்” என்கிறார் நிரஞ்சன்..நேற்று போபாலில் நடந்த தேசிய அளவிலான HYBRID CHALLENGE போட்டியில் சிறந்த புதுமைப் படைத்தல் பரிசை வென்றது HYPERIONS INC. குழு.

“சென்னா,ஷுமாக்கர் பந்தயங்களை கேட்டும்,ரோச்சியின் பாய்ச்சலை டிவியில் பார்த்தும் மெய்சிலித்தவர்கள் நாங்கள். எல்லா பசங்களையும் போன்று பைக், கார் மீது எங்களுக்கும் தீராக் காதல். எப்படியாவது வாழ்நாளில் ஒரு காரையாவது வடிவமைத்து விட வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் அந்த ஆசை,  நான் கல்லூரி மாணவனாக இருக்கும் போதே நடக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் ராஜேஷ்.

”ஆண்டு தோறும் IMPERIAL SOCIETY OF INNOVATIVE ENGINEERS (ISIE) நடத்தும் HYBRID CHALLENGE போட்டியில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் கலந்து கொள்ளும். இரு ரவுண்டுகளாக நடக்கும் இதில், முதல் தகுதிச் சுற்றில் வடிவமைக்கப் போகும் காரின் டிசைன் ஆராயப்படும். பின் இறுதிச் சுற்று நடக்கும். அவர்கள் சொல்லும் நிபந்தனகளுக்கு (CONDITIONS) இணங்க காரை வடிவமைக்க வேண்டும். சாதாரண கார், வெறும் பெட்ரோலிலோ டீசலிலோ ஓடும். ஆனால் HYBRID காரானது பெட்ரோல், டீசலுடன் எலெக்ட்ரிக் மோட்டர் மூலமும் ஓடும்” என விவரித்தார் சுராஜ்.

”IIT,IISC,NIT போன்ற பெயர் பெற்ற தொழிற்நுட்பக் கல்லூரிகளை எல்லாம் வீழ்த்தி,  தகுதிச் சுற்றில் தேசிய அளவில் முதல் இடம் பெற்றது,  என்றுமே எங்களால் மறக்க முடியாது. ஓர் கல்லூரியைச் சேர்ந்த குழுவில் 20 பேர் வரை இருக்கலாம். RMK ENGINEERING COLLEGE ஐ சேர்ந்த எங்கள் குழுவில்,  மொத்தம் 11 மெக்கானிக்கல் பசங்களும், 9 எலக்ட்ரிக்கல் பசங்களும் என மொத்தம் 20 பேர் இருக்கிறோம்”என அணியைக் குறித்து விவரித்தார் சோமேஷ்.

”6.5 HP திறனும் 3300 rpm திறன் கொண்டது எங்களது இன்ஜின். வேறு பாகங்களை வாங்கி அதனை WELDING,REAMING எல்லாம் செய்தோம். டிசம்பர் மாதத்திலேயே செய்து முடிக்க வேண்டியது. ஆனால் எதிர்பாக்காத மழை காரணமாக எங்களால் நினைத்த அளவிற்கு செய்து முடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சிறந்த அணிக்கான பரிசையும் பெற்றிருப்போம். ஜஸ்ட் மிஸ். பந்தயம் நடந்த போபாலில் பல அணிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டோம். வித விதமான டிசைன், தயாரிப்புகள் என நாங்களே UPDATE செய்யும் வாய்ப்பையும் பெற்றோம்” என ரேஸ் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் சரவணன்.மேலும் சரண் கூறுகையில் “பள்ளியில் படித்த QUANTUM PHYSICS எல்லாம் எங்க உதவப் போகுதுனு உதாசீனப் படுத்துவோம். ஆனால் நம்புங்கள் ஓர் வாகனத்தை வடிவமைக்க ஆணி வேரே QUANTUM PHYSICS கற்ற RELATIVITY தான். அடிப்படை கல்வியில் நமது அடித்தளம் நன்றாக இருந்தால், நம்மால் எதையும் செய்ய இயலும். எங்களுக்கு இந்த பரிசை பெற்றுத் தந்ததில் முக்கிய பங்கு இதில் நாங்கள் செய்த புதுமைகள் தான். SEATBELT லாக் செய்தால்தான் வண்டி ஆன் ஆகிற மாதிரி வடிவமைத்திருந்தோம். இதற்கு பிரவின், ராமகிருஷ்ணன், ரங்ஜு, பிரமோத் முதலியவர்களின் பங்கு முக்கியமானது”

"ஓர் தனி நபரால் இதை செய்து முடிக்க முடியாது. எங்கள் வெற்றிக்கான காரணமே எங்களிடம் இருந்த ஒற்றுமைதான். எங்களுக்குள்ளேயே வேலையை பகிர்ந்து  கொண்டோம்.எங்கள் சந்தேகங்களை தீர்க்க புருஷோத்தமன் சார் ரொம்ப உதவினார். எங்களுடன் சேர்ந்து இராப்பகலாக உதவினார். இந்த நேரத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்”என வெற்றிக்கான ரகசியத்தைச் சொன்னார் செந்தமிழ் செல்வன்.


“இந்த HYBRID VEHICLE செய்து முடிக்க மொத்தம் 2 லட்சம் வரை ஆனது. இவ்வளவு தொகையானது தனி ஓர் காராக செய்ததால். இதுவே மொத்தமாக செய்தால் தயாரிப்பு செலவுக் கணிசமாக குறையும். பெட்ரோலின் தட்டுப்பாட்டாலும் மாசுத் தன்மையாலும் இனி வரும் தலைமுறையில்  HYBRID VEHICLE க்குதான் மார்க்கெட் இருக்கும். அதனால் இதையே ஓர் தயாரிப்புத் தொழிலாகவும் செய்யும் எண்ணம் உள்ளது” என வருங்காலத்தைப் பற்றி சிந்தித்தார் சரவணக் குமார்.

படிப்பு, பின் கம்ப்யூட்டரில் வேலை என இயந்திர வாழ்கையை நாடாமல் படிப்புக்கான வேலைப் பெற இதைப் போன்று தனித்துவத் திறமையை வளர்த்துக் கொண்டால் அதுவே வெற்றியின் மந்திரம்.

- ச.ஸ்ரீராம் இரங்கநாத்

(மாணவ பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close