Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்...!

“தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படுபவையே…

-ஒப்புக்கொள்ளபட்டால்…” – புரூஸ் லீ

நாம் எல்லாரும் தப்பு செய்வோம். ஆன எங்க அந்த தவறை ஒத்துக்கொண்டால் சுய மரியாதை போய்விடுமோ என்ற வறட்டு பிடிவாதத்தோட இருப்போம். இதான் நம்ம பிரச்னையே. ஆனா அதே தவற என்னைக்கு ஒத்துக்கிட்டு அதிலிருந்து பாடம் கத்துக்கிறோமோ அன்னைக்குதான் அந்த தவற நாம மறுபடியும் செய்யமாட்டோம். இதுதான் இன்றைக்கு ஒவ்வொருத்தரோட முன்னேற்றத்தின் போராட்டக் களம்.

மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,  தவறு செய்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றனர். முதல் பிரிவினர், தீர்க்கமான மனநிலை கொண்டோர், அதாவது, ஒரு தவறு ஏற்பட்டதும் உடனடியா இந்த வேலை நமக்கு வராது. நா அவ்ளோதான் இனிமேல்... என ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிடுவர். இரண்டாம் பிரிவினர், வளரும் மனநிலை கொண்டோர், ‘ஆஹா, இந்த முறை தவறிவிட்டதே, பரவாயில்லை இந்த தவறு நமக்கு சிறந்த பாடம்’ என தங்களையே வளர்த்துக்கொள்வோர்.


“நமது தவறுகளை கவனிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் அத்தவறுகள்தான் நம்மை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்பவை” என இந்த ஆய்வினை மேற்கொண்டு வரும் ஜேசன் மோசர் கூறுகிறார்.

மேற்சொன்னபடி வளரும் மனநிலை கொண்டோரே வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். ஆனால் தவறை ஒப்புக்கொள்ள மனமில்லாதோர் தங்கள் நிலையிலேயே எவ்வித வளர்ச்சியும் இன்றி தீர்க்கமாக இருந்துவிடுகின்றனர்.

“தவறுகள் தொடர்ந்தால், அது உன் தவறு அல்ல, உன் முடிவு”-

-    பாலோ கொயேலோ

ஸ்மார்ட் ஆக இருப்போர், தவறு செய்தால் முடங்கிவிட மாட்டார்கள். காரணம், அந்த தவறை அவர்கள் மறுமுறை செய்யத் துணிய மாட்டார்கள். நம்மில் பலரும் கீழ்வரும் தவறுகளை பலமுறை செய்திருப்போம். ஆனால் ஸ்மார்ட் ஆக இருப்போர் இத்தவறுகளை ஒரு முறைக்கு மேல் செய்திருக்கமாட்டார்கள்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல:

எல்லாரையும் நல்லவர் என நம்பி, வெளுத்ததெல்லம் பாலாக நினைத்து இருக்கமாட்டார்கள் புத்திசாலிகள். வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கி எந்த ஒரு முடிவையும் எடுக்கமாட்டார்கள். யாரு எது சொன்னாலும் ஒரு முறை செய்வதற்கு முன்னாடி இரண்டு முறை யோசிப்பாங்க. எந்த ஒரு வாய்ப்பும் சும்மா வருவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.

இந்த முறை சரியாவரும்

'இந்த முறை சரியா செய்திடுவோம என ஒரு வேலையில் செய்த தவறையே,  மறுபடி மறுபடி செய்துவிட்டு வெற்றி பெறுவோம் என்ற கற்பனைக் குதிரையில் பறக்கமாட்டார்கள்.

“ஒரே விதமான அணுகுமுறையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்பவன் அறிவிலி”   - ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்

எடுத்த காரியத்தில் தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், மறுபடியும் முயலும் போது புது விதமான அணுகுமுறையுடன் களமிறங்குவார்கள், புத்திசாலிகள்.வெற்றிகள் சுலபமல்ல:

ஸ்மார்ட்டா இருப்பவங்களுக்கு தெரியும் வெற்றிகளும் மனத்திருப்தியும் அவ்வளவு எளிது அல்ல என்பது. அதைவிடுத்து, இன்றைய உலகத்துல உலகையே விரல் நுனியில வச்சிருக்கலாம் என்ற மிதப்பில், நினைத்தது எல்லாம் உடனே கையில் கிடைச்சிடும், இன்னைக்கு விதைத்து நாளைக்கு அறுவடை செய்திடலாம் என்ற முட்டாள்தனம் அறவே கூடாது. வெற்றி சுலபமல்ல, தாமதமானாலும் அதை எப்படி தக்கவைக்க வேண்டும் என்பதை  விடா முயற்சி உடைய புத்திசாலிகள் தெரிந்துவைத்திருப்பர். ஏனெனில் அவர்கள் தவறில் பாடம் கற்றவர்களாகவே இருப்பர்.

எதைப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்:

ப்ளான் பண்ணி, பட்ஜெட் போட்டு செலவு செய்யப் பழகணும். அப்போதுதான் பொருளாதார ரீதியா நாம ஸ்டடி ஆக முடியும். இப்படி வரும் காசு அப்படி எப்படி போகுது என்பதே தெரியாம இருந்தா முன்னேற்றம் கேள்விக்குறி ஆகிடும். அநாவசிய செலவுகளைக் குறைக்க பட்ஜெட் போட்டுதான் வாழணும். ஸ்மார்ட் ஆக இருக்கணும்னு நினைத்தா, இத ஃபாலோ பண்ணுங்க.

பெரிய லட்சியங்களை மறந்திடக்கூடாது:

நம்ம முன்னாடி இருக்குற சின்ன சின்ன வேலைகளில் மூழ்கி,  பெரிய லட்சியங்களை ஒரு போதும் மறந்திட கூடாது. வாழ்க்கை நமக்காக பெரிய சிம்மாசனம் போட்டு வைத்து காத்திட்டு இருக்கும் போது,  இரும்பு நாற்காலிக்கா புத்தியை செலவழித்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. சின்ன வெற்றிகளுக்கு சந்தோசம் அடைந்து அதுலயே மயங்கி,  பெரிய லட்சிய வெற்றிக்கான பணிகளை ஒருபோதும், விவேகம் உள்ளவன் மறக்கமாட்டான்.

நம்ம வேலைய நாமதான் செய்யணும்:

ஸ்கூல் படிக்கும் காலத்துல இருந்தே வீட்ல செய்யசொல்லி கொடுத்த ஹோம் வொர்க் எல்லாம் க்ளாஸ் வொர்க்காகதான் செய்திருப்போம். எப்போவாவது லக் அடிச்சு வின் பண்ணிருப்போம். ஆனா பெரிய உலக சாதனையை பதிவு செய்த மாதிரி அத கொண்டாடி,  அடுத்து செய்ய வேண்டியதை மறந்திடுவோம். இப்படி எல்லம் இல்லாம கொடுத்த வேலையை எங்க எப்போ செய்யணும் என்ற அடிப்படையில் தெளிவா இருக்கணும். நாம செய்த வேலைக்கு கிடைக்கும் வெற்றிதான் நிலையானது என நம்புபவன் அறிவாளி.

வான்கோழி மயிலாக முடியாது:

இந்த மாதிரி வாழணும் அந்த மாதிரி வாழணும் என்கிற எதிர்பார்ப்பில்,  எந்த மாதிரியும் வாழாம போறதுக்கு நம்ம வாழ்ற வாழ்க்கையில் உண்மையோடு இருந்தாலே போதும். இன்னொருத்தர் மாதிரி வாழணும் என்று ஆசைப்படுபவன் தன்னையே இழக்கிறான்.ஜால்ரா தட்டுவதை நிறுத்தவும்:

ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ரா தட்டி ரொம்ப காலம் வாழ முடியாது. உங்களுக்கு எது சரி எது தவறு என தெரியுதோ அதன்படி நடக்கணும். அடுத்தவங்களுக்காக மறைத்து, மறைந்து, வளைந்து நெளிந்து வாழமாட்டான் புத்திமான்.

அப்பாவியாக நடிக்க வேண்டாம்:

ஒரு வேலை நடக்கணும் என்பதற்காக அப்பாவி வேஷம் தரித்தால் முன்னேற்றம் நிலையானதாகக் கிடைக்காது. அது ஒரு வகை அடிமைத்தனம். பாவப்பட்டவர் போல் காட்டிக்கொள்வதில் ஒரு போதும் பெருமைப்படமாட்டார்கள் புத்திசாலிகள்.

அடுத்தவரை மாற்ற முயற்சிப்பது:

மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்கவேண்டும். நான் ரொம்ப பெரிய திறமைசாலி. இப்படி இந்த  நபரை மாற்றிக் காண்பிக்கிறேன் என வீண் சவால்கள் உடம்புக்கு ஆகாது. இப்படி டம்பம் பேசும் ஜாம்பவான்கள் அடுத்தவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன் பேர்வழி எனப் பெரிதாக்குவர். ஒரு விஷயம் ஒத்துவரவில்லை என்றால் உங்களை மாற்றுங்கள் எதிராளியை மாற்ற எண்ணி உங்களையே இழக்காதீர்கள்.

-த. எழிலரசன்
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close