Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாத்தி யோசித்த கலெக்டர்!

நாட்டில் எது இருக்கிறதோ இல்லையோ ஜாதி இருக்கிறது, தற்கொலை இருக்கிறது, கொலை இருக்கிறது. அவற்றுக்கு ஈடாக சுத்தமில்லாத குளங்களும் உள்ளன.

நம் ஒவ்வொருவரின் தெரு ஓரத்திலும் தூர்வாரப்படாத ஒரு குளம் கண்டிப்பாக இருக்கும். அதைப் பற்றி நம் அன்றாட வாழ்வில் நினைப்பதுகூட இல்லை. என்றாவது ஒரு நாள் திடீரென குளம் சுத்தமாக்கப்படும்! அதுவும் ஏதோ மந்திரி வந்தால் மட்டுமே. ஆனால் எவ்வித சுயநல நோக்கமுமின்றி,  பணத்தை வீண் விரயம் செய்யாமல், புதுமையாக யோசித்து ஒரு குளத்தை சுத்தம் செய்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் பிரஷாந்த் நாயர்.

இவரது புதுமை என்னவென்றால்,  குளத்தைச் சுத்தம் செய்பவர்களுக்கு 1 பிளேட் பிரியாணி, அதுவும் சுவையான மலபார் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்பதுதான். கொயிலாண்டியில் உள்ள பிஷாரிக்காவு குளம் 14 ஏக்கர் நிலப்பரப்பு உடையது. முழுவதும் குப்பை, ஆகாயத் தாமரையால் நிறைந்து இருக்கும் ஒரு குளத்தைச் சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் இல்லை.
 


இந்த குளத்தைச் சுத்தம் செய்ய வேலையாட்களுக்கு பணம் கொடுத்து இருக்கலாம். ஆனால், அந்த பணம் நேரடியாக எந்த ஊழலும் இல்லாமல் மக்களிடம் சென்றடைகிறதா என்பது முதல் கேள்வி. மேலும், அந்த காசு மக்களின் வயிற்றை நிறைக்கிறதா, வீண் விரயம் ஆக்கப்படுகிறதா என்பது இரண்டாம் கேள்வி. இது எதற்கும் வழி வகுக்காமல் சுத்தம் செய்ய முன்வருபவர்களுக்கு சுவையான பிரியாணியை அளித்திருக்கிறார் பிரஷாந்த். இந்த பிரியாணிக்கான காசை மாவட்ட நிர்வாகத்தின் வறட்சி தடுப்பு நிதியில் இருந்து பெற்றுக் கொண்டார்.

 "மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும். ஒரு கருணைமிகு சமுதாயமாக இது மாற வேண்டும் என்பதே என் ஆசை. நமது பார்வை வெறும் கட்டடம், கல், மண், பணம் இவற்றில் இருந்து மனிதர்களை நோக்கி மாற வேண்டும்" என்கிறார் பிரஷாந்த்.

இவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு,  இவரது முகநூல் பக்கத்தில் 1,60,000 லைக்குகளில் பிரதிபலிக்கிறது.

இவர் இதற்கு முன்னர்,  உள்துறை அமைச்சருக்கான செகரெட்ரியாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் இதற்கு முன்பு கொண்டுவந்த "ஆப்ரேஷன் சுலைமானி" ஏகப்பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கூப்பனை பெற்று,  கோழிக்கோடு முழுவதும் குறிப்பிட்ட சில கடைகளில் கொடுத்து வயிறார உணவு உண்ணலாம். அந்த உணவிற்கான காசு sponsorship மூலம் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஊரிலும் இதுபோல அழிந்துவரும் குளங்கள், ஆறுகள் ஏராளம். இதே நிலைமை நீடித்தால் குளம் என்றால் என்ன? என கேட்கும் தலைமுறை உருவாகும்.

நாம் இழந்த செழிப்பை மீட்க இதுபோல "மாத்தி யோசிக்கும்" தளபதிகள், தலைவர்கள் நம் நாட்டிற்கு தேவை!

ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ