Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே பள்ளியில் 9 இரட்டையர்கள்!

சாலையில் இரட்டையர்கள் நடந்து வந்தாலே ஆச்சர்யமாக பார்ப்போம். ஆனால் ஒரே பள்ளியில் 9 இரட்டையர்கள் படிப்பதை பார்த்திருக்கிறீர்களா?

திருவண்ணாமலை மாவட்டம் நேசல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாலவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில்தான் இந்த 9 இரட்டையர்களின் ஆச்சர்ய அணி வகுப்பு. 

உலக முழுவதும் ஆராய்ச்சியாளர்கள்,  சுமார் 100 ஆண்டுகளாக இரட்டையர்களின் பண்புகளை குறித்தும், அவர்களின் பெற்றோர்களிடமிருந்து மரபு வழியாக பெரும் முக்கிய குணாதிசயங்கள், நடத்தை மற்றும் படிக்கும் முறைகளை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக ஒரே தோற்றமுடைய மற்றும் பாலினம் உடைய இரட்டையர்கள்,  மாறுபட்ட தோற்றம் மற்றும் பாலினம் கொண்ட இரட்டையர்கள் எவ்வாறு ஒரு சில குணாதிசயங்களில் மாறுபடுகின்றனர் என்பதை கண்டறிந்துள்ளனர். ஒரே தோற்றமுடைய இரட்டையர்கள் ஒரே விளையாட்டை தேந்தெடுத்தனர். ஆனால் அவர்களின் உடல்பயிற்சி பழக்கம் மாறுபட்டு அமைந்திருந்தது.  அவர்கள் பிரியா நேரிட்டாலும் தனித்தனி சூழலில் அவர்களின் உடல்பயிற்சி ஒன்றாகவே இருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது.

இந்நிலையில் மேற்கூறிய பள்ளியில் பயிலும் இந்த 9 இரட்டையர்களின் உணவு உட்கொள்ளும் முறையும் ஒரே மாதிரியாகதான் உள்ளது.  7-ம் வகுப்பு படிக்கும் இரட்டையர்களின் ஒருவரான நித்தியஸ்ரீ படிப்பில் முதன்மையாகவும்,  மற்றொருவர் விளையாட்டில் முதன்மையாகவும் திகழ்வது ஒரு வேறுபாடாக உள்ளது.

நமது தமிழ் படங்களில் இரட்டையர்கள் படம் என்றாலே ஒரே தோற்றமுடன் காட்டுவார்கள். ஆனால் இந்த பள்ளி இரட்டையர்களிடம் கேட்கும்போது,  நாங்கள் ஒரு சில விஷயங்களில் மட்டும் ஒத்துப்போவோம் என்று கூறுகிறார்கள்.

செய்தி மற்றும் படங்கள்: ம.சுமன்

(மாணவ பத்திரிக்கையாளர்) 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ