Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு !

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது.

'' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். 

இது ஒரு பக்கம் இருக்க,  ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சீத்தாமரி மாவட்ட தலைமை நீதிபதி ராஷ்பிஹாரி முன்பு,  சந்தன்குமார் சிங்கின் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ராஷ்பிஹாரி, " வாதி சந்தன்குமார் சிங் தாக்கல் செய்துள்ள மனுவானது , உண்மைக்கு மாறான பல சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

சந்தன்குமார்சிங்கின் உறவினர்கள் இது பற்றி ஊடகங்களிடம் பேசும்போது, '' வழக்கைத் தொடுத்த சந்தன்குமார்சிங், இந்த வழக்கை மேல்முறையீடுக்கு கொண்டு போகும் மனநிலையில்தான் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால்,  இந்த வழக்கை கீழ் கோர்ட்டுக்கு கொண்டு போனதற்கே, சந்தன்குமார்சிங்கிற்கு எதிர்ப்புகள் கிளம்பி விட்டது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மிரட்டலுக்கு உள்ளானார். கோர்ட்டுக்கே பாதுகாப்புடன்தான் போய் வரவேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போது வீட்டுக்கும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் எஸ்.பி.யிடம் சந்தன்குமார் மனு கொடுத்துள்ளார் " என்கின்றனர்.

சின்னதாய் ஒரு புராண ப்ளாஷ்- பேக் ஸ்டோரி:

ஜனகபுரி ( இன்றைய பீகார் என்கிறார்கள்) யின் மன்னன் ஜனகராஜா. இவர் மகள் சீதை. இதிகாசப்படி இவருடைய பிறப்பு மிதிலை நகரில் இருந்துள்ளது. அந்த மிதிலை நகர்தான் பீகாரின் சீதாபுரி மாவட்டமாக இன்றும் சீதை நினைவாக போற்றப்படுகிறது. சீதையின் கணவர் ராமர். ராமரின் தம்பி லட்சுமணர். சிற்றன்னை பேச்சை மீறாமல் 14 ஆண்டுகாலம் ராமர், தன் மனைவி சீதையுடன்  வனவாசம் போகிறார். இதுதான் இராமாயணத்தில் இந்த வழக்குக்கு தொடர்புள்ள ஸ்டோரியின் அவுட் லைன்...

இதை கண்டித்துதான் சீதையை காட்டுக்கு ராமரும், அவர் தம்பி லட்சுமணரும் கொண்டு போனது தவறென்றும், அண்ணன் தம்பியர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் சந்தன்குமார் வழக்குப் போட்டுள்ளார்.

இந்த வழக்கு வேறு ஏதாவது வடிவத்தில் மீண்டும் விஸ்வரூபமெடுக்காத வரை சரிதான்!  
 

-ந.பா.சே.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ